தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

ஐ.நாவின் பொறிமுறை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்போம்: யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று பேர் வவுனியாவில் கைது! கருணா குழுவினராம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:27.24 AM GMT ]
மட்டக்களப்பு, சந்திவெளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்ளடங்கலாக 3 பேரை வவுனியாவில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், கணவனும் மனைவியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா குழுவில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களின் பிள்ளைகள் மூவர் மட்டக்களப்பில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் மூன்று பேரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXmx4.html
ஐ.நாவின் பொறிமுறை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்போம்: யோகேஸ்வரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 02:18.21 AM GMT ]
2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட கொடிய யுத்தத்தால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது.
இக்குடும்பங்கள் இன்றும் துயரத்தில் வாழ்கின்றது. அதுமட்டுமின்றி வெள்ளைக் கொடியுடன் யுத்த வேளையில் இராணுவத்திடம் சரணடைந்தோரும், யுத்த வேளையில் இராணுவத்தாலும், ஏனைய அமுக்கக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்களும், கடத்தப்பட்டவர்களும் இன்றுவரை எங்குள்ளார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
உறவைத் தேடி அலையும் குடும்பங்களின் அவல நிலை தீர்ந்ததாக இல்லாத நிலையில்ள கண்துடைப்புக்கு காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி அரசாங்கம் மேற்கொள்ளும் நாடகம் ஒரு பக்கம் எம் தமிழ் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலை.
அதுமட்டுமின்றி, அரசியல் கைகதிகளாக பல துன்பங்களுக்கு மத்தியில் சிறையில் வாடும் உறவுகள் பல ஆயிரக்கணக்கான அங்கவீனர்களின் துன்பியல், கணவனை இழந்து குடும்பத்தை தலைமை தாங்கி வாழ்வாதாரத்துக்காக அலைந்து திரிந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வறிய தமிழ் தாய் மார்களின் நிலை ஒரு பக்கம், பெற்றோரை இழந்து தவிர்க்கும் சிறுவ சிறுமியரின் துன்ப நிலை மறுபக்கம், யுத்தத்தின் கொடுமையால் அனைத்து உடமைகளையும் இழந்து இன்றுவரை வாழ்க்கை நிலையை கட்டி எழுப்ப முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் நிலை, இவை எமது தமிழ் சமூகத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பேரினவாதிகள் கொடி செயற்பாடு இவ் அரசாங்கத்தின் அட்டூழியங்கள் இவற்றை மறக்க முடியுமா? எமது தமிழ் சமூகம்.
எம்மை எமது அயல் நாடும் கைவிட்ட நிலையில் எமக்காக நீதி கேட்டு எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறலுக்காகவும், யுத்த வேளையில் எம்மக்களிடையே மனிதாபிமான செயற்பாட்டை மேற்கொள்ளாமைக்காகவும்,
சர்வதேச சமூகம் கொண்டு வந்த சர்வதேச விசாரணை என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை உண்மையான நீதியை பாதிக்கப்பட்ட எம் தமிழ் சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்கும் வகையிலும், எமது தமிழ் மக்களின் அனைத்து துன்ப நிலையும் மறைந்து அவர்கள் வாழ்வில் இன்ப நிலை உருவாகவும் இவ் ஜய புதுவருடம் வழிவகுக்க வேண்டும் என எல்லோரும் இறைவனை இப்புனித நாளில் பிரார்த்திக்குமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
அத்தோடு துன்புறும் எமது தமிழ் உறவுகளை மனதில் கொண்டு அவர்களுக்கு இயன்றளவு ஆதரவுகளை வழங்கி அவர்கள் மனங்களுக்கு ஆனந்தமளிப்பதுடன், புதுவருட நாளில் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணாது. சைவ உணவு உண்டு தேவையற்ற கேளிக்கை நிகழ்வுகளை இயன்ற வரை நீக்கி இறை வழிபாட்டு நாளாக கொள்ளுமாறும் வேண்டுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXmx7.html

Geen opmerkingen:

Een reactie posten