தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

அரசியல் முரண்பாடுகளை மூடிமறைக்க அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகின்றது!

பிரச்சினைக்கு தீர்வின்றேல் கடும் நடவடிக்கை!- முஸ்லிம் காங்கிரஸ் - ஆளும் கட்சி அமைச்சர் - ஹக்கீம் இரகசிய பேச்சு
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 11:55.13 PM GMT ]
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.
மிகவும் தீர்மானமிக்க கோரிக்கைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி உரிய பதிலளிக்க தவறினால், சகல முஸ்லிம் கட்சிகளுடனும் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற போதிலும், தீர்வுத் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேரிடும் எனவும் வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர் ஹக்கீமுடன் இரகசிய பேச்சுவார்த்தை
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர் சிரேஸ்ட அமைச்சர் என்பதுடன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியொன்றை வகிக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த தகவலை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு தூதுவராலய பிரதிநிதிகள் சிலரும் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmx0.html
அரசியல் முரண்பாடுகளை மூடிமறைக்க அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகின்றது!
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:09.57 AM GMT ]
ஆளும் கட்சியின் அரசியல் முரண்பாடுகளை மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
இனவாத மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என கோரியுள்ளது.
நெடுங்கேணியில் கோபி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டமை,
16 புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை,
வடக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டமை,
போன்ற சம்பவங்கள் நோக்கும் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்துள்ளனர் என்றே எண்ணுவார்கள்.
பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு புலிப்பீதியை உருவாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான அணுகுமுறைகள் நாட்டில் சிங்களää தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXmx2.html

Geen opmerkingen:

Een reactie posten