குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வடபகுதிக்கான அதிசொகுசு ரயில் வண்டியுடன் மற்றொரு ரயில் வண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த கடுகதி சொகுசு ரயிலுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது
காயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் காயமடைந்தவர்கள் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இதன்காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
2ம் இணைப்பு
வவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேரு மோதல் - 70 பேர் காயம் - 5 பேர் கவலைக்கிடம்
ஒரே தண்டவாளத்தில் பயணித்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று மோதியதில் இன்று பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நகரங்களுக்கு இடையிலான சொகுசு ரயிலும், வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட என்ற புகையிரதமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதன்போது ரயில் பெட்டிகள் 20 அடிவரையில் வீசப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் இரண்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு எஞ்ஜின்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் – பொத்துஹெர பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 70 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், குருநாகல் மற்றும் பொல்காவல வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொல்காவல – குருநாகல் ரயில் சேவையும் பாதிப்படைந்துள்ளது.
3ம் இணைப்பு
ரயில் விபத்து 10 கோடி ரூபா நட்டம்!
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்துக்கான காரணம் ரயில் சமிஞ்ஞைகளை பொருட்படுத்தாது பயணித்தமை என சந்தேகிப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பீ ஆரியரத்ன குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற பெரும் பாதிப்புடைய ரயில் விபத்து இது என அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தின் காரணமாக 10 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பெட்டிகள் இரண்டு மற்றும் ரயில் என்சின்கள் இரண்டு முற்று முழுதாக சேதமடைந்துள்ளன.
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp7.html
Geen opmerkingen:
Een reactie posten