தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 april 2014

கொலையாளிகள் இராணுவத்தில் நீக்கம்! ஒட்டுமொத்த இராணுவத்திற்கே களங்கம்

இராணுவத்தின் கௌரவம் பற்றி தெரியாத சிலர் போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவ சேவையில் இணைந்து கொண்டுள்ளதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான நபர்களினால் மேற்கொள்ளப்படும் ஒழுக்க விரோத செயற்பாடுகள் ஒட்டுமொத்த இராணுவத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

குருநாகல், வெல்லாவ ஒப்பந்த கொலையுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் மூவரும் இராணுவத்தில் இருந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவியே 20 லட்ச ரூபா பணத்தை வழங்கி, கணவரை கொலை செய்யுமாறு இராணுவச் சிப்பாய்களிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை உரிய முறையில் நடத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்ப வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. பணம் வழங்கிய பெண் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மூன்று சிப்பாய்கள் தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தராதரம் பாராது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இராணுவத்திலிருந்து விலக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நீதிமன்றின் ஊடாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
29 Apr 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398762180&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten