சிறிலங்காவுடனான வர்த்தகத் தொடர்புகளை பிரித்தானியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரும் புதியதொரு போராட்டத்துக்கு அங்குள்ள புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் தயாராகி வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்கக் கூடாது என்பது தொடர்பாக, ஏற்கனவே பிரித்தானியாவின் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் இந்த அமைப்புகள் பேச்சுக்களையும் நடத்தியுள்ளன.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக, பிரித்தானியாவே சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குகிறது.
தேயிலை, ஆடைகள், மீன், மிதிவண்டி, இறப்பர், மாணிக்கம் மற்றும் நகைகள், தும்பு உற்பத்திகள், மட்பாண்டப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், விளையாட்டுப் பொருட்கள் என்பன சிறிலங்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அடுத்த ஆண்டு பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்குள்ள தமிழ் வாக்காளர்கள், பல இடங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.
இந்தநிலையில் சிறிலங்கா மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படமாட்டேன் என்று அங்குள்ள சிங்கள அமைப்பின் தலைவர் டக்ளஸ் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுரகம் அங்குள்ள இலங்கையர்களுடன் பேசி ஒருங்கிணைக்கத் தவறியதால், விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர்களின் கை ஓங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.
சிறிலங்கா அரசாங்கம் ஒரு ஆதரவுதேடும் பொறிமுறையை உருவாக்காது போனால், நிலைமைகள் இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா மீது வர்த்தகத் தடைவிதிக்கப்பட்டால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.jvpnews.com/srilanka/66247.html
Geen opmerkingen:
Een reactie posten