தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

காரைநகர் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு!

முரளீக்கு உதவும் தர்ம ஸ்தாபன நிதி கரியாவது அம்பலம்

கடந்த வியாழக்கிழமை(10.04.2014) அன்று லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து, பிரித்தானிய எம்.பீக்கள் 5 பேர் கொழும்பு செல்ல ஏற்பாடாகி இருந்தது. இவர்களின் பெரும்பாலானோர் ஆழும் கன்சர்வேட்டிவ் கட்சியை சார்ந்தவர்கள். இவர்கள் கொழும்பு செல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்(அதி சொகுசு) கொழும்பில் 5 நட்சத்திர விடுதியில் தங்க இடம். மேலும் இவர்களுக்கான சாப்பாட்டுச் செலவு மற்றும் போக்குவரத்து என்று அனைத்து செலவுகளை தாமே பொறுப்பு ஏற்பதாக இலங்கையில் உள்ள தர்ம ஸ்தாபனம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்த தர்ம ஸ்தாபனத்திற்கு நிதி வழங்குவதும் மற்றும் அதனை கவனித்து வரும் மேற்பார்வையாளர் முத்தையா முரளீதரன் ஆவார் என்ற விடையம் தற்போது வெளியாகியுள்ளது. இவரது மேற்பார்வையில் இயங்கும் குறித்த தர்ம ஸ்தாபனமே பிரித்தானிய எம்.பீகளை தமது செலவில் இலங்கைக்கு அழைத்து அவர்களை வளைத்துப் போட முற்பட்டுள்ளது.
முரளி மூலமாக இலங்கைத் தமிழருக்கு உதவி என முழக்கமிடும் சில தனவந்தர்கள் முரளீக்கு உதவும் பணம் கரியாவது பாரிய அவலம் என மக்கள் முனுமுனுக்கின்றனர்
http://www.jvpnews.com/srilanka/65680.html

காரைநகர் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு

காரைநகர் துறைமுகப் பிள்ளையார் ஆலய மூல விக்கிரகம் உட்பட அதனுடன் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் களவு போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஆலய தர்மகார்த்தா சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தாபனம் செய்வதற்க்காக மூல விக்கிரகம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் ஆலயத்தின் உட்புறத்தில் தனியான ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ஊர்காவற்றுறை பொலிசார் குறிப்பிட்ட திருட்டு சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/65685.html
Vikirakam

Geen opmerkingen:

Een reactie posten