தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

சவூதியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைப் பெண்

ஓரினச் சேர்க்கையை எதிர்த்ததால் வயிற்றை வெட்டிக் கொண்ட யுவதி!- புத்தளத்தில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 06:53.40 AM GMT ]
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை நிறுத்துமாறு பெரியவர்கள் கண்டித்ததால், 22 வயதான யுவதி ஒருவர் தனது வயிற்றை கத்தியால் கிழித்து கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நவகத்தேகம, இங்கினிமிட்டி என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
22 வயதான இளம் யுவதிகள் இருவர் நீண்டகாலமாக ஒரே வீட்டில் வசித்து வந்ததுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
இந்த பழக்கத்தை கைவிடுமாறு வீட்டில் உள்ள மூத்தவர்கள் கண்டித்ததால் மனமுடைந்த ஒரு யுவதி தனது வயிற்றை கத்தியால் குத்தி கிழித்துக் கொண்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
அவர் தொழில் புரிந்த இடத்தில் பணியாற்றி வந்த பிங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த சம வயதான யுவதிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு எல்லை மீறி சென்றுள்ளதுடன் இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்த விலகியதுடன் பிங்கிரிய யுவதியின் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சவூதியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைப் பெண்
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 06:39.44 AM GMT ]
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சவூதியில் இலங்கைப் பெண் தொழில் புரிந்து வந்த வீட்டு எஜமானின் இரண்டு பெண் பிள்ளைகள், இலங்கை பெண்ணின் கால்களை பிடித்து கொள்ள, வீட்டு எஜமான் பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகியதாக கூறப்படும் சம்பவம் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சம்பவம் தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டமை அடுத்து, இலங்கைப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சத்திர சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து மூன்று சட்டைப் பின்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து இலங்கைப் பெண் பணிபுரிந்த வீட்டு எஜமான மற்றும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளிடம் சவூதி பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten