ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.
இலங்கை குடியிருப்பு செயலாளர் அலுவலகம் மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வீடமைப்பு மற்றும் நிரந்தர நகர அபிவிருத்திக்கான ஐ.நாவின் மூன்றாவது மாநாட்டை முன்னிட்டு தேசிய குழு ஒன்றை நியமிப்பதற்காக அமைச்சர் வீரவன்ஸ் அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த இலங்கை சம்பந்தமான நிபுணர்கள் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்ஸ், கொழும்பில் அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் குடில் அமைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், அவர் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற போவது பலரை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten