தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 april 2014

மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் அருவருக்கத்தக்கது: ஜே.வி.பி!

மீனவர்கள் பிரச்சினையில் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! ஜெயலலிதா குற்றச்சாட்டு!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 12:43.34 PM GMT ]
 தமிழக மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவெற்றியூரில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபுவுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை பிரசாரம் செய்தார்.
அப்போது, தமிழக மீனவர்களை வஞ்சித்த அரசு மத்திய காங்கிரஸ் அரசு.
ஆனால், மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
மீனவர்கள் பிரச்சினையில் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிக்கக் கூடாது என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசே.
ஊழல் சாம்ராஜ்யம் நடத்தும் மத்திய அரசை இந்த தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று குற்றஞ்சாட்டி பேசினார் ஜெயலலிதா.
http://www.tamilwin.com/show-RUmsyERULXis0.html
மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் அருவருக்கத்தக்கது: ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 01:48.21 PM GMT ]
மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை பார்வையிட சென்ற மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அருவருக்கத்தக்க சம்பவமாக கருதி வன்மையாக கண்டிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜே.வி.பி அருவருக்கத்தக்க தாக்குதலாக கருதுவதுடன், அதனை வன்மையாக கண்டிக்கின்றது.
வன்முறையாளர்கள் தாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல நாட்டு மக்களை. அவர்கள் நாட்டு மக்களின் பிரதிநிதிகள்.
இதற்கு எதிராக அனைவரும் அணித்திரள வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் கொள்கை வேறுப்பாடுகள் இருந்தாலும் தாக்குதல் சம்பவமானது தவறானது.
அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதா, அங்கு விமானங்கள் வருகின்றனவா, என்ன நடக்கின்றது. பறவைகளாக வருகின்றன. யானைகள் இருக்கின்றவா என்பதை பார்க்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.
சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றதும் சாரத்தை மடித்து கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியால் சுட முயற்சிக்கின்றனர் எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERULXis1.html

Geen opmerkingen:

Een reactie posten