சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவராகவும், சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராகவுமானால் மாத்திரமே இலங்கை அரசியல் சமநிலைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராஜதந்திரியான தயான் ஜயதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது பொது பல சேனாவின் அடாவடித் தனங்கள் எல்லைகளை மீறி இடம்பெறுகின்றன.
வீட்டு ஆக்கிரமிப்பு தொடர்பில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கடந்த தினத்தில் அமைச்சு ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டதை தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடியதாக இருந்தது.
இந்த அளவு துணிச்சலாக அமைச்சு ஒன்றை முற்றுகையிடும் தைரியத்தை பொதுபல சேனாவுக்கு யார் வழங்கியது?
அவர்களால் தேடப்பட்ட வட்டரக்க விஜித தேரர் கொலையாளியோ, குற்றவாளியோ இல்லை.
இந்த சம்வங்களுக்கு தற்போதைய அரசியல் சமநிலை இன்மையே காரணம். சரியான எதிர்கட்சி ஒன்று இல்லை.
இந்தநிலையைப் போக்குவதற்கு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும், சரத் பொன்சேகாவையும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக தேசிய பட்டியல் ஊடாக உள்வாங்க வேண்டும்.
அவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்வதால், அரசாங்கத் தரப்பில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்க சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அவ்வாறு செய்தால் மாத்திரமே அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இல்லை என்றால், ஐக்கிய தேசிய கட்சியின் காலம் அத்துடன் நிறைவடைந்து விடும் என்று தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfq6.html
Geen opmerkingen:
Een reactie posten