தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 april 2014

ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ மூனுடன் ஆலோசனை

மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் கைதாகியிருக்க வேண்டும்!- த கிரவுண்ட் வீவ்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 11:45.42 PM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் பெர்ணான்டோவை மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. த கிரவுண்ட் வீவ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகும்.
ஆனால் இதனை மீறி அவரும், அவரது ஆதரவாளர்களும் உள்ளே நுழைந்துள்ளமை முதல் குற்றமாகும்.
இரண்டாவதாக, துப்பாக்கி ஒன்றை, அது விளையாட்டுத் துப்பாக்கியானாலும், அச்சுறுத்தும் நோக்கில் ஒருவர் பொது இடத்தில் காட்சிப்படுத்துவது இலங்கை அரசியல் அமைப்பின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மூன்றாவதாக தாக்குதலுக்கு உள்ளான ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை மக்களால் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள்.
இந்த தாக்குதல் மூலம் அவர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் கீழும் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரையில் காவற்துறையினர் அவரிடம் வாக்கு மூலமேனும் பதிவு செய்திருக்கவில்லை என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERULXit1.html

ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ மூனுடன் ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 04:21.48 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். 
ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விசாரணைக் குழு மற்றும் அதில் இடம்பெறுவோர் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
எனினும், திட்டமிட்டபடி அடுத்தமாதம் எந்த நேரத்திலும் இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும்.
அதற்கு முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி மூலமும் அறிவிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERULXitz.html

Geen opmerkingen:

Een reactie posten