தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

இலங்கையரின் தாய்லாந்து மனைவியை விபச்சாரம் செய்பவர் என்று கூறிய விமான நிலைய அதிகாரிகள்


இலங்கையர் ஒருவரின் தாய்லாந்து மனைவியை கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் புத்தபெருமானின் உருவத்தை கையில் பொறித்திருந்தமை காரணமாக நாடு கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாய்லாந்து பெண்ணும் அவரின் கணவரான இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அதிகாரிகள் அவர்களை விசாரித்துள்ளனர்.
இதன்போது இலங்கை கணவர் தாய்லாந்து பெண்ணை தமது மனைவி என்று அறிமுகப்படுத்தியபோதும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தாய்லாந்து பெண் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர் என்றும் அவருடன் வந்த ஆண் அவரின் உதவியாளர் என்று அதிகாரிகள் அடையாளமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இது குறித்து இரண்டு பயணிகளும் குடிவரவு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை தெரியவரவில்லை என்று குடிவரவு ஆணையாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten