தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

பொதுபல சேனாவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் உதவுகின்றனர்: ஹக்கீம்

சந்திரிக்காவுக்கு பயந்து சர்வதேச நாணய நிதியத்திடம் மன்றாடிய மகிந்த
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 11:30.51 AM GMT ]
அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் தற்போது நடைபெற்று வரும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டுடன் நடைபெறும் முன்னாள் அரச தலைவர்களின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னள் ஜனாதிபதியை மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என எனக் கூறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திடம் மன்றாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மாநாட்டில் இன்று உரையாற்றவிருந்ததுடன் அவர் வாசிங்டன் செல்வதற்கான விமான பயணச்சீட்டு மற்றும் தங்குவதற்கான ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உரையாற்ற போவதாக அங்கு சென்றுள்ள மத்திய வங்கியின் அதிகாரியான துரலாகே ரணசிங்க என்பவர் அறிந்து கொண்டதுடன் அது பற்றி நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்திரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பீ.பி. ஜயசுந்தர இந்த தகவலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார்.
தகவலை கேட்ட ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாநாட்டை பயன்படுத்தி அரசியல் லாபம் பெறலாம் என கருதி பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கு எப்படியான வாக்குறுதியையாவது வழங்கி, சந்திரிகாவின் வோஷிங்டன் பயணத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி, நிதியமைச்சின் செயலாளரிடம் கூறியுள்ளார்.
இதன் பின்னர், பீ.பி.ஜயசுந்தர உடனயாக அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு நிதியம் விதிக்கும் எந்த நிபந்தனையாக இருந்தாலும் அதனை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு பிரதி உபகாரமாக முன்னாள் ஜனாதிபதியின் உரையை இரத்துச் செய்யுமாறு மன்றாடியுள்ளார்.
முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், விரிவாக ஆராய்ந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியின் உரையை ரத்துச் செய்ய தீர்மானித்தனர்.
இதனடிப்படையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உரையை இரத்துச் செய்துள்ளதாக நிதியத்தின் அதிகாரிகள், அவருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தனது உரை ஏன் ரத்துச் செய்யப்பட்டது என்பதை தேடியறிந்த முன்னாள் ஜனாதிபதிக்கு அதற்கான உண்மை அறிந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் உரையை ரத்துச் செய்தால், எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் எப்படியான நிபந்தனையாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது அமுல்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmv2.html
பொதுபல சேனாவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் உதவுகின்றனர்: ஹக்கீம்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 11:18.14 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பினர் அதிகாரம் படைத்தவர்களின் உதவியுடனேயே, ஜாதிக பல சேனா நடத்திய ஊடக சந்திப்பை குழப்பியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த போது பொலிஸார் செயற்பட்ட விதம் இதனை உறுதிப்படுத்தியது.
அண்மையில் நடந்த இவ்வாறான சம்பவங்களை ஆராயும் பொழுது இலங்கையில் சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிராக சில பிக்குகள், பௌத்த தர்மத்திற்கு முரணாக செயற்படுவது கூடிய கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான நபர்கள் மற்றும் குழுவினர் நடத்தை சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்தும் அ திகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டின் கவனம் திரும்பியுள்ளது.
மேற்படி சம்பவம் நடைபெற்ற போது அது சாதாரணமாக சம்பவமாக கருதி கொம்பனித் தெரு பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆச்சரியமானது எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmv1.html

Geen opmerkingen:

Een reactie posten