தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

ஐ.நா விசாரணைக் குழுவில் புலிகளுடன் தொடர்புடைய இருவர் அரசு பாச்சல்

பொதுபல சேனா பிக்குகள் மது அருந்தியிருந்தனர்! வீடியோ ஆதராங்களுடன் நிரூபிக்கத் தயார்

தம்மை துண்டு துண்டாக வெட்டப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அச்சுறுத்தியதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டால் கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் வில்பத்து காட்டில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குகள் நடந்து கொண்ட விதம் மிகவும் அநாகரீகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பௌத்த பிக்குகள் மதுபானத்தை அருந்தியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விஜிதவை ஓர் பௌத்த பிக்குவாக தாம் கருதவில்லை எனவும், முஸ்லிம் மதத் தலைவர்களின் பகடை காயாக விஜித செயற்ட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Podubalasena-Thero01 Podubalasena-Thero02Podubalasena-Thero03Podubalasena-Thero08Podubalasena-Thero07Podubalasena-Thero06Podubalasena-Thero05Podubalasena-Thero04
இது தொடர்பான செய்தி
http://www.jvpnews.com/srilanka/65506.html


ஐ.நா விசாரணைக் குழுவில் புலிகளுடன் தொடர்புடைய இருவர் அரசு பாச்சல்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை தொடர்பில் விஷேட நிபுணர் குழுவொன்று மார்ச் மாத நடுப்பகுதியளவில் நியமிக்கப்படவுள்ளது.
குறித்த குழுவின் அறிக்கை ஒரு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65510.html

Geen opmerkingen:

Een reactie posten