தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

பிரித்தானிய தூதர்- ஹெரோயின் கடத்தல்காரருக்கு என்ன தொடர்பு ? அவிழும் மர்மம் !




இலங்கையில் கடமையாற்றி வரும் பிரித்தானியாவுக்கான துணைத் தூதுவர், இலங்கையில் கைதாகியுள்ள ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவரை சந்திக்கவேண்டும் என்று பொலிசாரிடம் கூறியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழ் ஊடகங்களில் இதுவரை இச்செய்தி வெளியாகவில்லை. அதிர்வு இணைய வாசகர்களுக்காக பிரத்தியேகமாக இச்செய்தியை நாம் வெளியிடுகிறோம் !

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி இலங்கையில், 35 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதுவரை காலமும் இலங்கையில் இவ்வளவு எடைகொண்ட, மற்றும் ஏ-கிளாஸ் என்று சொல்லப்படும் அதி உயர்தரம் கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதே இல்லை என்று கூறலாம். சர்வதேச சந்தையில் இதன்பெறுமதி பல மில்லியன் டாலர்களை தாண்டு. இதில் தொடர்புடைய மூவரை இலங்கைப் பொலிசார் அடுத்தடுத்து கைதுசெய்தார்கள். கனேடியப் பிரஜை ஒருவர், பாக்கிஸ்தான் பிரஜை ஒருவர் மற்றும் இலங்கைப் பிரஜை ஒருவர் என பொலிசார் மூவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இதேவேளை இலங்கைப் பொலிஸ் துறையின் உயரதிகாரியான இலங்கக்கோணை பிரித்தானிய துணைத் தூதுவர் இம் மாதம்(ஏப்பிரல்) 3ம் திகதி சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு ஏன் நடைபெறுகிறது என்று இலங்கக்கோணுக்கு விளங்கவில்லை. இருப்பினும் அவர் இலங்கைக்கான பிரித்தானிய துணைத்தூதுவர் றொபியை சந்தித்துள்ளார். துணைத்தூதுவர் றொபி தெரிவித்த கருத்துகள் இலங்கக்கோணை பெரும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கைப் பொலிசார் கைதுசெய்துவைத்திருக்கும் 3 நபர்களில் ஒருவர், தமது ஆள் என்றும், அவர் கடத்தல் கும்பலுக்குள் ஊடுருவி தகவல்களை வழங்கிவந்தார் என்றும் றொபி தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த நபரை தாம் பார்கவேண்டும் என்றும், அவரை விடுவிக்க வாய்ப்புகள் உள்ளதா என்ற கோணத்திலும் றொபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும் பிரித்தானியா மீது இலங்கை அதிருப்த்திகொண்டுள்ள விடையம் அனைவாராலும் அறியப்பட்ட விடையம் ஆகும். இச் சந்திப்பு குறித்து இலங்கக்கோண் வேண்டும் என்றே தகவல்களை தற்போது கசிய விட்டுள்ளார்கள். 

இதனால் பிரித்தானியாவில் உள்ள உளவு நிறுவனமான, எம்.ஐ 5 இதனை தற்போது துருவித்துருவி ஆராய ஆரம்பித்துள்ளது என்ற செய்தியும் கசிந்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய எம்.பி ஒருவர், இலங்கையில் உள்ள ஆண் ஒருவருடன் தொடர்பில் ஈடுபட்டு, இலங்கைப் பொலிசாரிடம் மாட்டியிருக்கிறார். பாலியல் ரீதியாக குறித்த இலங்கை இளைஞரை பிரித்தானிய எம்.பி தொட்டதாகவும் துன்புறுத்தியதாகவும் அந்த இளைஞர் பொலிசுக்கு தகவல் வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள இலங்கை அரசு, அந்த எம்.பியை கைதுசெய்யாமல் விட்டுவிட்டார்கள். தற்போது பிரித்தானிய பாராளுமன்றில், புலம்பெயர் தமிழர்கள் ஏதாவது தீர்மானத்தை கொண்டுவந்தால் அதனை எதிர்கவேண்டும் என்று அந்த எம்.பிக்கு இலங்கை அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் ஹெரோயின் கடத்தல் கும்பலில், பிரித்தானியாவுக்கு தேவையான ஆள் ஒருவர் இருந்தாரா ? இல்லை அவர் செல்வாக்கு பிரித்தானிய துணைத்தூதுவர் வரை பாய்கிறதா என்று தெரியவில்லை. இதன் காரணத்தால் தான் தூதுவர் இவரைக் காப்பாற்ற முனைந்தாரோ என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6662

Geen opmerkingen:

Een reactie posten