தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 april 2014

வில்பத்து குடியேறிகள் வெளியேற்றப்படுவர்!– அரசாங்கம் - மஹியங்கனை விஜித்த தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:37.51 AM GMT ]
வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பி.கருப்பதேவர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், 1974 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி தாம் இந்தியர் என்றும், எனினும 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற வேளையில் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அகதியாக வரும் போது தமது இந்திய கடவுச்சீட்டை மறந்து வந்துவிட்டதாகவும், இதனால் தங்களை இலங்கை அகதி முகாம்களில் தடுத்து வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தங்களை விடுவிக்குமாறு தெரிவித்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்த போதும், இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் வரையறைக்குள் வராது என்று மதுரை மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
அவரது மகன் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி தமிழகத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பண மோசடி செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhu1.html
ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஸியர்கள் 41 பேர் கைது
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:48.36 AM GMT ]
ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இலங்கைக்கு வந்திருந்த 41 பங்களாதேஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான லிபிய வீசாவை தயாரிப்பதற்காக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களில் ஒருவர் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர் என்று இலங்கை குடிவரவுத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தலா 7 லட்சம் ரூபாய் வரையில் ஆட்கடத்தல்காரருக்கு வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான அனைவரும் தற்போது மிரியானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhu2.html
வில்பத்து குடியேறிகள் வெளியேற்றப்படுவர்!– அரசாங்கம் - மஹியங்கனை விஜித்த தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 01:01.43 AM GMT ]
விலபத்து தேசிய பூங்காவில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் முஸ்லிம்களை குடியேற்றுவதற்கான வீடுகள் அமைக்கப்படவில்லை.
மாறாக அங்கு 44 தற்காலிக கூடாரங்களே அமைக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் விரைவில் கலையப்பட்டுää அங்குள்ள முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடு ஒன்றின் நிதி உதவியுடன், அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த குடியேற்றத்தை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹியங்கனை விஜித்த தேரருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
மஹியங்கனை பிரதேச சபைக்கு முன்னால் இன்று வட்டரெக்க விஜித்த தேரருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
வில்பத்து தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களின் சட்ட விரோத குடியேற்றத்துக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே அவர் கொழும்பில் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பு ஒன்றை பொது பல சேனா அமைப்பு குறுக்கிட்டு தடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  இதில் பல பிக்குகளும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyERXLXhu3.html

Geen opmerkingen:

Een reactie posten