தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

இலங்கையின் வெற்றி நிகழ்வு: கனடாவின் ஒளிபரப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியது!

கனடாவின் ஐசிசி 20க்கு 20 உலக கிண்ண ஒளிபரப்பாளர் நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமைக்காகவே அந்த நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோரியுள்ளது.
இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதன் பின்னர் குறித்த நிறுவனம் தமது ஒளிபரப்பை நிறுத்தியது. அத்துடன் வேறு ஒரு நிகழ்ச்சி அந்த வேளையில் ஒளிபரப்பப்பட்டது.
இது தொடர்பில் ரசிகர்களிடம் இருந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து கருத்துரைத்த கனடாவின் ஸ்போட்ஸ்நெட் நிறுவன பேச்சாளர் செபஸ்டியன் காட்டியா, இந்த தவறு குறித்து தாம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை அவர் தெளிவாக்கவில்லை.
ஐசிசி 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது.
இதனை 29 ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்தன. 1.8 பில்லியன் ரசிகர்கள் இந்த ஒளிபரப்பை கண்டுகளித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnq0.html

Geen opmerkingen:

Een reactie posten