இவர்கள் சம்பாதிக்க அவர்கள் மேலே பழி சொல்கிறார்கள்,தமிழரே இவர்கள்தான் உங்கள் உண்மையான எதிராளிகள்,உளவாளிகள்!!
புலம் பெயா் தமிழா்களே! நீங்கள் ஒருவருக்கும் தெரியாது இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளுக்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புக்களுக்கும் உண்டியல் மூலம் அனுப்பும் பணம் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் கண்கானிக்கப்படுகின்றது. அதுவும் தமிழ் வா்த்தகா்கள் சிலரை வைத்து இந் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது…. நம்ப முடியாமல் இருக்கின்றதா?? இதோ தகவல்கள்…
கடந்த ஆண்டு மே மாதம் கொழும்பில் இருந்து விளம்பர முகவா்கள் என்ற போர்வையில் வந்த சிலர் யாழ் நகர்ப் பகுதியில் முகாமிட்டிருந்தனர்.இவர்கள் தென்னிலங்கை நடிகைகள் மற்றும் மொடல்கள் ஆகியோர் மூலம் விளம்பரம் செய்வதற்கும் தென்பகுதியிலும் பிரபலமடைவதற்குமாக சில புடவை வர்த்தகர்கள் மற்றும் நகைக் கடை உரிமையாளர்களை அணுகியுள்ளனர். இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மசியாத வர்த்தகர்கள் பலர் இருந்தும் குடாநாட்டின் முக்கிய ஒரு வர்த்தகர் உட்பட மேலும் இரு வர்த்தகர்களும் இவர்கள் விரித்த வலையில் விழுந்ததாகத் தெரிய வருகின்றது.
தென்பகுதியில் இருந்து வந்த குறிப்பிட்ட நபர்கள் குறிப்பாக மறைவான முறையில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் செய்யும் வர்த்தகர்களைக் குறி வைத்தே சந்தித்துள்ளதாக எமக்குத் தெரிய வந்தது. யாழ்நகர்ப் பகுதியில் உள்ள புடவைக்கடை உண்டியல் பணப்பரிமாற்றம் செய்யும் வர்த்தகர் மற்றும் நகைக்கடை உரிமையாளரின் மருமகனான வர்த்தகரும் இவர்களின் வார்த்தையில் மயங்கியுள்ளனர்.
தென்னிலங்கை நடிகைகள் மற்றும் மொடல்கள் மற்றும் தென்னிலங்கை தொலைக்காட்சி நாடக நடிகைகள் ஆகியோரது புகைப்படங்கள் மற்றும் விளம்பரக் காணொளிகளை தாங்கள் கொண்டு வந்த கணனியில் போட்டோ காட்டியதுடன் இவர்களுக்கு சபலம் ஏற்படும்படியாகவும் கதைத்து விட்டு சென்றுள்ளனர்.
ஒரு சில நாட்களின் பின்னர் புடவைக்கடை வைத்திருந்த வர்த்தகரை கொழும்பு கல்கிசைப் பகுதிக்கு வரச் சொல்லி அழைத்த போது அவரும் அவரது நெருங்கிய உதவியாளரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பிரபல தென்னிலங்கை மொடலிங் யுவதியை இவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பின்னர் பாலியல் ரீதியாகவும் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதன் பின்னர் விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்து 3 இலட்சம் ரூபா பணமும் பரிமாறப்பட்ட பின் வர்த்தகரும் உதவியாளரும் யாழ்ப்பாணம் வந்து விட்டனர். இவர்கள் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னர் தன்னை விளம்பரத்தில் நடிக்க யாழ்ப்பாண வர்த்தகர்களை சம்மதிக்க வைத்தால் உங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் நீங்களே பண பேரத்தை பேசி என்னை விளம்பரத்தில் நடிக்க வையுங்கள் எனவும் குறித்த சிங்கள மொடலிங் யுவதி கூறியதாகத் தெரிய வருகின்றது. அவள் எதற்கு தூண்டில் போடுகின்றாள் என்பதை உணராத வர்த்தகரும் அதற்குச் சம்மதித்து தனது நெருங்கிய நண்பனான வங்கி முகாமையாளருக்கும் இன்னொரு வர்த்தகருக்கும் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்களையும் விளம்பரம் என்ற போர்வையில் கல்கிசைக்கு செல்ல வைத்துள்ளார். இச் சம்பவங்கள் கடந்ந வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன் மே மாத அளவில் நடைபெற்று தொடர்ந்து கொண்டிருந்துள்ளது.
1)கொழும்பு சென்ற வர்த்தகர் கல்கிசைப் பகுதிப் பொலிசாரிடம் தொடர்பு கொண்டு தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தார்.தர் அவ்வாறு ஒரு மொடலுடன் பாலியல் உறவு கொள்ளவில்லை எனவும் தன்னை யாரோ கப்பம் பெற அச்சுறுத்துவதாகவும் அவர் பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.
2)பொலிசாருடன் வர்த்தகர் தொடர்பு கொண்ட விடையத்தை வர்த்தகலை அச்சுறுத்திய நபர் முற்றாக அறிந்து அவ வர்த்தகரின் பாலியல் வீடியோவின் ஒரு பகுதியினை அவருக்கு தொலைபேசியூடாக அனுப்பியுள்ளார்.
3)தன்னுடன் வந்த நெருங்கி உதவியாளரைச் சந்தேகப்பட்ட வர்த்தகர் அவரை கல்கிசைப் பொலிசாரிடம் மாட்டிவிட்டார். பொலிசார் அவரை விசாரித்த போது வர்த்தகர் மொடலுடன் இருந்த விடயம் அம்பலமாகியது. தன்னுடன் இருந்த உதவியாளர் அவரை அச்சுறுத்தவில்லை என்பதை விசாரணைகள் மூலம் அறஜந்து கொண்டனர்.
4)அதன் பின்னர் அந்தத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்ட பொலிசார் அது முகவரி இல்லாத ஒரு தொலைபேசி இலக்கம் எனக் கூறியும் அந்தத் தொலைபேசி அழைப்பின் பின்னர் வர்த்தகரின் பிரச்சனையில் தலையிடாது வர்த்தகரை ஏகத் துரத்தியதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் வர்த்தகர் வேறு வழியில்லாமல் அந்தத் தொலைபேசி அழைப்பு எடுத்த நபரை சந்தித்ததாகத் தெரிய வருகின்றது.
வர்த்தகர் குறித்த நபரை சந்தித்த பின்னர் தான் திட்டமிட்டு வலையில் வீழ்த்தப்பட்டதை உணர்ந்து தன்னை போன்று பலர் இவ்வாறு இருப்பதை அறிந்து கொண்டுள்ளார். சந்தித்தவர்கள் எவர்கள்?? புலம்பெயா் தமிழ் மக்கள் அனுப்பும் பணம் யாரால்?? யாருக்கு?? எவ்வளவு தொகை?? எதற்காக? என்பன பற்றிய அனைத்து விபரங்களும் வர்த்தகரும் ஏனையவர்களும் கொடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானமை தொடர்பான அனைத்து விபரங்களும் அடுத்த பகுதியில்
Geen opmerkingen:
Een reactie posten