தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

நாமாலின் நெருங்கிய நண்பர்கள் இருவர் முல்லைத்தீவில் கைது: அதிரும் தகவல் !

ஆட்டு புரோக்கர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அதிபரின் அடுத்த மாமாவேலை அம்பலம் !
11 April, 2014 by admin
யாழ்ப்பாணத்தில் உள்ள பல தொழில் நுட்ப்பக் கல்லூரிகளுக்கு விஜயம் செய்யும் இராணுவத்தினர், அங்குள்ள மாணவர்களையும் மாணவிகளையும் இலங்கை இராணுவத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஆயுதம் தரித்து நீங்கள் போராட தேவையில்லை என்றும் , இராணுவத்தில் ஆயுதப் பயிற்சி எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இராணுவத்தினர் தொழில் சார் துறைகளில் வேலைசெய்தால் போதும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி வருகிறார்கள். இருப்பினும் தமிழ் மாணவர்கள் இலங்கை இராணுவத்தில் இணைய பெரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனைச் சமாளிக்க இராணுவத்தினர் சில அதிபர்களை கைக்குள் போட்டு பெரும் சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

ஆட்டு புரோக்கராவும் யாழ் தொழில்நுட்ப்ப கல்லூரியின் பணிப்பாளாராகவும் உள்ள ஜோகராஜா என்பவர் தற்போது இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார். மாணவ மாணவிகளை அவர் தனியாகச் சந்தித்து இராணுவத்தில் இணைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்றும், பெரும் பணத்தை சம்பளமாகப் பெறலாம் என்றும் கூறிவருகிறார். இவர் பல மாணவருக்கு மூளைச் சலவை செய்து வருகிறார். இலங்கை இராணுவமும் பெரும் சதித்திட்டத்தோடு தான் செயல்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர்களை இணைப்பது. அதனூடாக சர்வதேசத்தில் நல்ல பெயர் எடுப்பது. மேலும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவது இல்லை. தொழில் நுட்ப்ப பிரிவில் வைத்து வேலைவாங்குவது இல்லை என்றால் சமையல் தொடர்பான இடங்களில் விட்டு வேலை வாங்குவது என்று திட்டமிட்டுள்ளார்கள் இலங்கை இராணுவத்தினர்.

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்தாலும் அவர்களுக்கு, ஆயுதப் பயிற்சிகளை வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள். ஏன் எனில் இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் பிற்காலத்தில் ஒரு ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பும் உள்ளது அல்லவா ? இந் நிலையில் அதிபர் ஜோகராஜா வின அடாவடி பெரும் அடாவடியாக உள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6664
நாமாலின் நெருங்கிய நண்பர்கள் இருவர் முல்லைத்தீவில் கைது: அதிரும் தகவல் !
11 April, 2014 by admin
இலங்கை அதிபர் மகிந்தரின் மகன் நாமால் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்கள் இருவர் முல்லைத்தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இருந்து தமிழர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இவ்விருவரும் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பிவந்துள்ளார்கள். 45 வயதாகும் அருள் ஜெனிபேர்ட் மற்றும் 38 வயதாகும் மரியதாஸ் ஆகியோரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள். அவுஸ்திரேலிய அரசாங்கம் இவர்கள் பெயர்களையும், இவர்கள் இருக்கும் இடத்தையும் கொழும்பில் உள்ள தமது தூதுவராலயம் ஊடாக, அறிவித்துள்ளார்கள். இதனையடுத்தே எதனையும் செய்யமுடியாத கட்டாய நிலையில், இவர்களை பயங்கரவாதப் பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 

சமீபத்தில் இவர்கள் இருவரும் பெரும் பணத்தை செலவழித்து படகு ஒன்றை வாங்கியதாகவும், மேலும் அறியப்படுகிறது. முல்லைத்தீவில் உள்ள மீன் பிடிச் சங்கத் தலைவராக அருள் ஜெனிபேர்ட் இருந்துள்ளார். புலிகள் ஆட்சியின் கீழ் முல்லைத்தீவு இருந்தகாலத்தில் இவர் மீனவச் சங்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் கொழும்பு சென்றதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்தும் செயல்பட்டு வந்தார். நமால் ராஜபக்ஷவின் தொடர்பு கிடைத்த பின்னரே அவர் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கம் கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே இவர்கள் கைதாகியுள்ளார்கள் என்றும், இருப்பினும் இவர்கள் விரைவில் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்றும் விடையம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6665

Geen opmerkingen:

Een reactie posten