தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

5.6 மில்லியன் பவுன்சுடன் சிக்கிய "அலெக்ஸ்" லண்டன் தமிழர்களும் தொடர்பு !


லண்டனில் பொய்யான வர்த்தம் ஒன்றை ஆரம்பித்து, பொதுமக்களிடமும் மற்றும் முதலீட்டாளர்களிடமும் இருந்து பெருந்தொகைப் பணத்தை அபகரித்துவந்த "அலெக்ஸ் கோப்" என்னும் நபரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. கைதுசெய்தவேளை அவரிடம் மீதமாக 5.6 மில்லியன் ஸ்டேலிங் பவுன்ஸ் இருந்துள்ளது. வெம்பிளியில் உள்ள உதைபந்தாட்ட ஸ்டேடியத்தில் சமையல் தொழில் பார்த்துவந்த அலெக்ஸ் என்னும் நபர் திடீர் செல்வந்தர் ஆனார். அவர் கடந்த வருடம் 950,000 பவுண்டுகளை காசினோவில் செலவழித்துள்ளார். அதுமட்டுமல்லாது 512,000 பவுன்சுகளை இரவுநேர கேளிக்கை விடுதியிலும் 125,000 பவுன்சுகளை ரஸ்டோரன்டிலும் செலவழித்துள்ளார். எவ்வாறு நீங்கள் இப்படி திடீர் பணக்காரர் ஆகினீர்கள் என்று, கேட்டால் ஒரு புத்தகத்தை படித்தேன் அதில் கூறப்பட்ட வியாபாரத்தை செய்தேன் அதனால் உழைத்து முன்னேறினேன் என்று இவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு போதாக்குறைக்கு பேட்டி ஒன்றைக் கூட வழங்கியுள்ளார் என்றால் பாருங்களேன்.

இவர் சொல்லும் வளர்சிக்குப் பின்னால் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் இருந்துள்ளார்கள். இவர் குறிப்பிடும் தொழில் என்ன தெரியுமா ? கேட்டால் பல தமிழர்கள் ஆடிப்போவர்கள் ! லண்டனில் உங்களிடம் யாராவது வந்து, உங்களை ஒரு திட்டத்தின் கீழ் இணையச் சொல்லி கேட்டிருப்பார்கள்(சிலவேளை ஞாபகம் வரும்). நீங்கள் ஒரு £50 பவுன்டை போட்டு இணைந்தால் அதற்கு ஒரு வட்டி வரும் என்றும் பின்னர் நீங்கள் 2 பேரை அந்த திட்டத்தில் இணைத்தால் அவர்களுக்கு வரும் வட்டியில் ஒரு பங்கு உங்களுக்கு வரும் என்று சொல்லி ஆசை காட்டி இருப்பார்கள். இதனூடாக மாதம் 1000 பவுன்ஸ் கூட சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியிருப்பார்கள். இப்படி லண்டனில் பல திட்டங்கள் உள்ளது. இந்த திருட்டு கூட்டத்தின் ஒரு தாதா தான் தற்போது கைதாகியுள்ளார். இவர் பல ஏஜண்டுகளை லண்டனில் வைத்திருப்பார்.

அவர்கள் சாதாரண இந்தியர்கள் மற்றும் தமிழர்களை அணுகி மண்டையை கழுவுவார்கள். பின்னர் அவர்களே உங்களிடம் வந்து இப்படி ஒரு திட்டம் இருக்கிறது காசைப் போடலாம் என்று சொல்லுவார்கள். உண்மையில் அவர்களுக்கு கூட என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியாது. இந்த வலையில், பெரும் செல்வந்தர்கள் கூட விழுவது உண்டு. தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் சாதாரண மக்கள் என்று பலரிடம் இவ்வாறு காசை வாங்கிக்கொண்டு, அதனை "பிகி வங்கி" (அதாவது ஏமாற்று வங்கி) என்னும் ஒரு வங்கியில் போட்டு, சிலருக்கு மட்டும் மாத வட்டியைக் கொடுப்பார்கள். கிடைத்த பணத்தை அவர்கள் பெரும் தொழில் துறைகளில் போட்டு பெரும் லாபம் சம்பாதித்துவிட்டதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் பார்த்தால், இவர்கள் அந்தக் காசை எடுத்துக்கொண்டு ஒரு நாள் ஓடி மறைந்துவிடுவார்கள். இதேவேளை லண்டனில் பரவலாக மேலும் ஒரு விடையம் நடந்துவருகிறது.

அதுதான் காணிகளை விற்கும் ஒரு மாஜா ஜால பிசினஸ். அதாவது லண்டனுக்கு சற்று வெளியே "ஹெமேல் ஹம்ஸ்டட்" அல்லது லூட்டன், போன்ற இடங்களில் 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலம் உள்ளதாக சிலர் கூறிவருகிறார்கள். பெரிய (அதாவது 15 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும்), அதனை பட்டா போட்டு துண்டு துண்டாக விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறுவார்கள். 2 ஏக்கர் நிலம் 8,000 பவுன்சில் இருந்து விற்பனைக்கு இருப்பதாக கூறுவார்கள். ஆனால் அதில் வீடு கட்ட முடியாது என்றும், இன்னும் 5 ஆண்டுகளில் அதில் வீடு கட்ட கூடிய, பர்மிஷனை(அனுமதியை) பெற்றுவிடமுடியும் என்றும் கூறுவார்கள். அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அக்காணியின் விலை 10 மடங்காக அதிகரித்து இருக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டுவார்கள். இதனை நம்பி கூட பல தமிழர்கள் காணிகளை வாங்கி விட்டு, எப்போது அனுமதி கிடைக்கும் என்று காத்து நிற்கிறார்கள். 

காணியை வாங்கு முன்னர் அதில் உள்ள மண்ணை எடுத்து, லண்டனில் உள்ள பகுப்பாய்வு மற்றும் வீடு கட்ட அனுமதி வழங்கும் சபைக்கு அனுப்பினால். அவர்கள் அதனை பரிசோதித்தி அந்த நிலத்தில் வீடு கட்டலாமா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள். அதனை செய்யாமல் தமிழர்கள் இவ்வாறு காணிகளை வாங்கி , வருடக்கணக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விடையத்திலும் தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

இவ்வாறு பிசினஸ் செய்யும் நபர்களும், காணிகளை விற்கும் நபர்களும் அதிர்வு இணையம் தொடர்பாக இனி அவதூறுகளை பரப்புவார்கள். ஆனால் அதற்கு எல்லாம் நாம் அஞ்சப்போவது இல்லை.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6734

Geen opmerkingen:

Een reactie posten