தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் பிரமாண்டமான நிகழ்ச்சி-

தமிழருக்காக போராடுகிறார்களாம்,தமிழருக்கு எதிரான ,தமிழ்ப் பண்பாடே தெரியாத விஜய் டிவி போன்றவற்றை அழைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளும் சமகாலத்தில் செய்கிறார்களாம் லண்டன் பிரித்தானியா வாழ்  தமிழர்!செத்தவீடு நடந்தோ அல்லது யாராவது சுகவீனமாயிருக்கும் வீட்டில் நல்ல நிகழ்வு செய்யாத கலாச்சாரம் தமிழ்க் கலாச்சாரம்!அப்போ இவர்கள் யார்!!தமிழரா??


லண்டனில் இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்டார் விஜய் நைட் மாபெரும் இசைநிகழ்ச்சி O2 Arena பிரமாண்டமான மேடையில் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களோடு நடைபெறவிருக்கின்றது.


பிரபல தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர் சேது புகழ் விக்ரம், மற்றும் விஜய் தொலைக்காட்சி பிரபல தொகுப்பாளினி DD, நீயா நானா புகழ் கோபிநாத், மற்றும் பற்பல அருமையான பாடல்களை பாடிய பிரபல பின்னணிப் பாடகர் மனோ உட்பட உங்கள் அபிமான சின்னத்திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் கலந்துகொள்ளும் பிரமாண்டமான ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சிக்காக அனைவரும் லண்டனுக்கு வருகை தந்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தில் நடைபெறும் இம் மாபெரும் நிகழ்ச்சி மிகவும் குதூகலமாக நடைபெறவிருக்கின்றது.
உங்கள் அபிமான நட்சத்திரங்களின் கலக்கலான மாபெரும் நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதோடு அவர்களை நேரில் பார்த்து அவர்கள் தொடர்பான விமர்சனங்களை அவர்களுக்கு தெரிவிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியக் கலைஞர்களோடு ஈழத்துக் கலைஞர்களும் கலந்துகொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
vikkiram
dd
photo 4
photo 3
photo 2


http://www.jvpnews.com/srilanka/66227.html

Geen opmerkingen:

Een reactie posten