ஏற்கனவே சில நாடுகளுடன் கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு தற்போது மேலும் சில நாடுகளோடு இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளது என அறியப்படுகிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவராவது பிடிபட்டால் அவர்களை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த , இலங்கை அரசும் மலேசிய அரசும் இரகசியமாக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் சமீபத்தில் கைதான நந்தகோபன் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இது இவ்வாறு இருக்க, நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வியட்நாம் நாட்டு மக்கள் பாதுகாப்பு அமைச்ச்ரோடும் இலங்கை ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
இலங்கைக்கும், வியட்நாமிற்கும் இடையே சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் வியட்நாம் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பேராசிரியர் கலாநிதி ஜெனரல் டிரான் டாய் குவாங்க், இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நேற்று கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன் அடிப்படையில் இனி வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என்று அறியப்படுகிறது. இதுபோன்று மேலும் பல ஆசிய நாடுகளோடு இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈடுபடவுள்ளது என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6655
Geen opmerkingen:
Een reactie posten