தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

மகிந்தராஜபக்ஷ தந்திரமான அரசியல்வாதி – சர்வதேச ராஜதந்திரிகள்

யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் பெண்ணின் சடலம் - கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 07:35.47 PM GMT ]
யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் குருநகரைச் சேர்ந்த கொன்சலிற்றா ஜெரோமி என்ற 22 வயதுடைய யுவதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlv1.html


மகிந்தராஜபக்ஷ தந்திரமான அரசியல்வாதி – சர்வதேச ராஜதந்திரிகள்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 07:42.42 PM GMT ]
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோஏசியா ரவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு ராஜதந்திரிகளின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் அடுத்தக் கட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
ஒப்பீட்டளவில் இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு மிகக்குறைவு.
இந்த நிலையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனாலும் மகிந்தராஜபக்ஷ ஒரு தந்திரமான அரசியல்வாதி.
அவர் சீனாவின் உறவை தம்மை விரிவுப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமே பயன்படுத்தி வருகிறார் என்று அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlv2.html

Geen opmerkingen:

Een reactie posten