தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

பொதுபல சேனாவுக்கு அரசின் ஒத்துழைப்பு உள்ளது!- அமைச்சர் வாசுதேவ

கூட்டமைப்பும் மு.காங்கிரஸூம் கொள்கைகளை மாற்றினால் ஆதரவு வழங்குவோம்: பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 07:26.38 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது கொள்கைகளை திருத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுமாயின், அந்த கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளும் மற்றும் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கொள்கைகளை ஆராய்ந்து அவருக்கு எமது அமைப்பு தயக்கமின்றி ஆதரவு வழங்கும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கொள்கைகளை ஆராய்ந்தே நாங்கள் ஆதரவு வழங்குவோம்.
பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால், அவருக்கு பின்னால், அரச சார்பற்ற குழுக்கள் இருக்கக் கூடும்.
கடந்த காலங்களில் தனி நபர்களின் அடையாளம் மற்றும் வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு சிலர் ஆதரவு வழங்கினர். நாங்கள் வேட்பாளரின் கொள்கையை நாங்கள் கவனத்தில் கொள்வோம்.
பௌத்த மதத்திற்கு முதன்மை இடத்தையும் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளும் எந்த தரப்பாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு வழங்குவோம்.
அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா என்பது முக்கியமல்ல. அவர்கள் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய முக்கியம்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சரியான பார்வையுடன் செயற்படும் நபருக்கும் நாங்கள் ஆதரவு வழங்கத் தயார் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmqy.html
ஞானசார தேரர் ஒரு மனநோயாளி: அமைச்சர் டிலான் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 01:35.57 PM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வட்டரெக்க விஜித தேரர் ஆகிய இருவரையும் மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இந்த பௌத்த பிக்குகளின் மனநோயை குணப்படுத்தி சமநிலையை பாதுகாத்து தருமாறு அமைச்சர் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி இரண்டு பௌத்த பிக்குகளின் செயல்களால் பௌத்த மதத்திற்கு நன்மை ஏற்படுத்தை விட தீமையே ஏற்படும். இவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் நவநீதம்பிள்ளை உட்பட மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் ஒப்பந்தத்தையே தற்போது நிறைவேற்றி வருகின்றனர்.
நாட்டில் மத நல்லிணக்கம் இல்லை எனவும் பௌத்தர்கள் கொடூரமானவர்கள் என்று மேற்குலக ஏகாதிபத்தியவாதிகள் முன்னெடுத்து வரும் நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையும் இந்த பல சேனா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
பௌத்தர்களிடம் இருக்கும் அகிம்சை தோற்றத்தை மட்டுமல்லாது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்வதை சகிக்காத மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளை ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் நிறைவேற்றி வருகின்றனர்.
இதனால் அவர்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். இவர்கள் பௌத்த தர்மத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. பௌத்த தர்மத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகத்திற்கு மத்தியில் சகல இலங்கையர்களை இவர்கள் அவமதிப்புக்கு உட்படுத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmr4.html
பொதுபலசேனாவும் முஸ்லிம் காங்கிரஸும் அரச ஆதரவில் இயங்கும் தீவிரவாதக் குழுக்கள்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 02:24.16 PM GMT ]
பொதுபலசேனா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இலங்கையின் ராஜபக்ச அரசாங்கத்தினால் அனுசரணை வழங்கப்பட்ட தீவிரவாத குழுக்கள் என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தக் குழுக்கள் சிங்கள மக்கள் அல்லது முஸ்லிம் மக்களின் நலன்களை கருத்திற்கொள்ளாது. தமது அரசியல் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படும் குழுக்களாகும்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தக்குழுக்களை நிராகரிப்பதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மனோ கணேசன் 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட போது அவருக்கு மாகாண சபையில் மேல்மாகாணத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன.
எனினும் இந்த முறை அவர் தனித்து போட்டியிட்டதன் காரணமாக ஒரு ஆசனத்தை அவர் இழக்க நேரிட்டது.
அவரை பொறுத்தவரை அவருக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனே வாக்குத்தளமாக இருந்தார்.
மேல் மாகாணசபையை பொறுத்தவரையில் தமிழ் மக்கள், மனோ கணேசனுக்கு வாக்களித்தனர். எனினும் ஜனாதிபதி தேர்தல் என்று வரும் போது தமிழர்கள் நிச்சயமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கேள வாக்களிப்பர்.
ஜே.வி.பியை பொறுத்தவரை முன்னரை விட தற்போது அதன் வாக்குவீதம் அதிகரித்துள்ளது..சரத் பொன்சேகாவின் வளர்ச்சியும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தநிலையில் இந்த இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்த இயங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவின் செயற்பாட்டால் எனக்கு மரண பயம் ஏற்பட்டது: விஜித தேரர்
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 09:40.03 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நடந்து கொண்ட விதத்தால் தனக்கு மரண பயம் ஏற்பட்டதாக வட்டரெக்க விஜித தேரர் கூறியுள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தாம் நடத்த ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிற்குள் புகுந்த ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனா அமைப்பினர் ஊடக சந்திப்பை நடத்தவிடாது குழப்பினர்.
ஞானசார தேரர் தன்னை ஒரு வார்த்தை கூட பேச விடாது அச்சுறுத்தியதுடன் பலவந்தமாக மன்னிப்பு கோருமாறும் மிரட்டினார் எனவும் விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmq5.html
பொதுபல சேனாவுக்கு அரசின் ஒத்துழைப்பு உள்ளது!- அமைச்சர் வாசுதேவ
[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 10:07.42 AM GMT ]
ஏனைய இனங்களின் மத தலங்களுக்குள் பலவந்தமாக புகுந்து பொதுபல சேனா தாக்குதல் நடத்தி வருகிறது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் இந்த நடவடிக்கையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு கட்டாயம் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு அண்மையிலும் அதற்கு முன்னரும் சட்டத்தை மீறி செயற்பட்டதை காண முடிந்தது. இதனால் இவ்வாறான அமைப்புக்கு எதிராக நாட்டின் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு சட்டத்தை செயற்படுத்தாது போனால் அதனை பொலிஸ் அல்லது அரசாங்கத்தின் குறையாக காணமுடியும்.
பௌத்த உரிமைகளை பாதுகாப்பதாக கூறி பொதுபல சேனா அமைப்பு மேற்கொள்ளும் இவ்வாறான தாக்குதல்களையும், தீவைப்புகளையும் எவராலும் அனுமதிக்க முடியாது.
பௌத்த மதத்திற்கு பிரச்சினை இருக்குமாயின் அதனை தீர்க்க தனியான அமைச்சு உள்ளது. அதன் ஊடாக அழுத்தங்களை கொடுத்து பிரச்சினைகளை தீர்கக வேண்டும்.
இதனை விடுத்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சட்டத்தை செயற்படுத்த அனுமதிப்பதன் மூலம் நாட்டின் சட்டத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmrz.html

Geen opmerkingen:

Een reactie posten