தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை பொதுபல சேனாவே பாதுகாக்கிறது!- ஆங்கில ஊடகம் - பொதுபல சேனா அடாவடித்தனம் - சட்டத்தரணிகள்

இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைக்க ஐ.நாவிடம் உதவி கோரவுள்ளார் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 04:20.27 PM GMT ]
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஊழல்களிலும் மக்களை அடக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டால் எதிர்க்கட்சிகள் ஐக்கிய நாடுகளின் உதவியை கோர வேண்டியேற்படும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரியவுடன் கலந்துரையாடியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை.
இந்த சூழ்நிலை தொடருமானால் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு சர்வதேச சமூகத்தை கோரவேண்டியேற்படும். இதற்காக ஐக்கிய நாடுகளின் உதவியை நாடவேண்டியிருக்கும் என்று சரத் பொன்சேகா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாடு ஒன்றில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் ஒழுங்குகள் உள்ளன.
எனவே அதனை உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERYLXgu7.html
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை பொதுபல சேனாவே பாதுகாக்கிறது!- ஆங்கில ஊடகம் - பொதுபல சேனா அடாவடித்தனம் - சட்டத்தரணிகள்
[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 11:53.04 PM GMT ]
பொது பல சேனாவை பயன்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினர் தங்களின் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் குடும்பம் தற்போது அதிகார போதையில் இருக்கிறது.
ஜனாதிபதியோ,  பாதுகாப்பு செயலாளரோ அதிகாரம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது என்ற நிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் ஒரே அரசாங்கத்தை வாழ்க்கை முழுவதும் வைத்திருப்பார்கள் என்று நம்ப முடியாது.
அரசாங்கத்தை மக்கள் தோற்கடிக்க வேண்டுமாக இருந்தால், எதிர்க்கட்சி ஒன்று பலமடைய வேண்டும்.
அதற்கு அரசாங்கம் செய்கின்ற பிழைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்க வேண்டும்.
ராஜபக்சவின் குடும்பம், அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மிஹின் எயார் நிறுவனத்தை அரசாங்கத்தின் நிதியிலேயே நடத்தி வருகிறார்கள்.
இந்த நிறுவனம் வருடாந்தம் பல பில்லியன் ரூபாய்களை இழந்து வருகிறது.
அதேபோன்று அம்பாந்தொட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றன நாட்டுக்கு எந்த பயனையும் தராதவை.
இவ்வாறான அரசாங்கத்தின் கிறுக்குத் தனங்களை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நிச்சயமாக அரசாங்கம் தோல்வியை சந்திக்கும்.
இதன் காரணமாகவே அரசாங்கம் தற்போது பொதுபல சேனாவை பயன்படுத்தி,  எதிர்க்கட்சிகளையும்,  பொது மக்களையும் திiசை திருப்பி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அடாவடித் தனத்தில்..!-  சட்டத்தரணிகள் சங்கம்
பொதுபல சேனாவின் அடாவடித் தனங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய அங்கீகாரம் பெற்ற அமைச்சர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் பொதுபல சேனா ஊடகங்களுக்கு தெரியவே அச்சுறுத்தி வருகின்றது.
இதனை தட்டிக் கேட்க இலங்கை அரசாங்கத்துக்கு தைரியம் இல்லையா? என்று சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இப்படி ஒரு மூர்க்கத்தனமான அமைப்பினை இலங்கையில் நடமாட விட்டுள்ளமை மக்களுக்கு அரசாங்கம் செய்கின்ற அநியாயம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERYLXgv2.html

Geen opmerkingen:

Een reactie posten