தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

யாழ். ஆளுனர் அலுவலகம் முன் மாநகரசபை தொழிலாளர்கள் பேராட்டம் !

யாழ். மாநகர சபையில் பதில் தொழிலாளிகளாக கடமையாற்றி கடந்த ஏழு மாதங்களாக வேலையற்று இருக்கும் தொழிலாளிகள் தமக்கான நிரந்தர நியமனத்தை துரிதமாக வழங்க கோரி ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று (21) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 5 தொடக்கம் 12 ஆண்டு காலமாக நாங்கள் மாநகரசபையில் தற்காலிக தொழிலாளிகளாக பணியாற்றினோம். திடீரென கடந்த ஆண்டு 9ம் மாதம் தற்காலிக தொழிலாளிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த 9ம் மாதம் 13ம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டோம்.
அப்போது எமது போராட்ட இடத்திற்கு வருகை தந்த தொழில் திணைக்கள அதிகாரிகள் யாழ் மாநகர சபை மேஜர் ஆகியோர் எமக்கு நேர்முக தேர்வு நடாத்தப்பட்டு மூப்பு அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கியதை அடுத்து நாம் எமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டோம்.
அதன் பின்னர் கடந்த 12ம் மாதம் 26ம் திகதி எமக்கான நேர்முக தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முக தேர்வில் சித்தியடைந்தவர்களுக்கு இந்த வருடம் ஜனவரி முதல் நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேர்முக தேர்வு நடைபெற்று நான்கு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
அது தொடர்பாக நாம் யாழ். மாநகரசபை ஆணையாளரிடமும் மேஜரிடமும் கேட்ட போது அடுத்த கிழமை தருகிறோம் அடுத்த மாதம் தருகிறோம் என கடந்த நான்கு மாதங்களாக நாட்களை கடத்தி வருகின்றனரே தவிர இதுவரை எமக்கான நியமனங்கள் தரப்படவில்லை.
கடந்த ஏழு மாதங்களாக நாம் தொழில் இன்றி வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றோம். எனவே காலம் தாழ்த்தாது துரிதமாக எமக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
எமக்கான நியமனங்களை காலம் தாழ்த்தாது வழங்க ஆளுனர் அவர்கள் இவ் விடயத்தில் தலையிட்டு எமக்கான நிரந்தர நியமனங்களை பெற்று தரக்கோரியே ஆளூநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.Jaffna-WorksJaffna-Works01Jaffna-Works02
http://www.jvpnews.com/srilanka/66362.html

Geen opmerkingen:

Een reactie posten