தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் தொடர்பில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்: கேர்னல் ஹரிஹரன்


இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா மத்தியஸ்த்தம் வகிக்கின்றமை தொடர்பில், இந்திய அரசாங்கம் அவதானமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்னல் ஹரிஹரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா இந்தியாவுடன் சிறந்த உறவை பேணுகின்ற நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை போல இந்தியா தென்னாபிரிக்காவை அச்சுறுத்தலான நாடாக கருதாது.
ஆனால் இந்தியாவும் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில் தென்னாபிரிக்கா இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்து வெற்றி காணுமாக இருந்தால், இலங்கையில் தென்னாபிரிக்காவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
எனவே இந்த விடயத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten