தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

கமலேந்திரனை கட்சியே முதலில் குற்றவாளி என தீர்மானித்துவிட்டது: விக்னேஸ்வரன் கவலை!


ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான க.கமலேந்திரனை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தமை கவலை அளிப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன்போது, வடக்கு மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.தவராசா, சபையின் அமர்வில் பங்குகொண்ட போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவரை வரவேற்று உரை நிகழ்த்தினார். தனது உரையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் க.கமலேந்திரன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஈபிடிபி கட்சி அறிவித்திருந்தது. இதன் பின்னர் மாகாண சபைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.தவராசா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று வடக்கு மாகாண சபையில் நடைபெற்றுவரும் அவை அமர்வில் தவராசா முதன் முதலாக பங்கு கொண்டு, தனது கன்னியுரையினை ஆற்றினார்.

Geen opmerkingen:

Een reactie posten