தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 april 2014

இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்படுவதில்லை: இன்னர் சிற்றி பிரஸ்

முள்ளிக்குளத்தில் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை: பாதுகாப்பு அமைச்சு
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 01:48.08 PM GMT ]
கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்ட காரணத்தினால், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து வில்பத்து சரணாலயத்தை அண்டிய பகுதியில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இருப்பிடத்தை இழந்தது. வேறு முஸ்லிம் குடும்பங்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjtz.html
ஐ.நாவின் பொதுச்சபை தலைவர் இலங்கைக்கு விஜயம்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 02:40.21 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தலைவரான ஜோன் வில்லியம் ஏஷ் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2014 ஆம் ஆண்டின் உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கை வருகை தரவுள்ளார்.
வில்லியம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக உள்ள அதேநேரம் அன்டிக்குவா மற்றும் பார்புடாவுக்கான ஐக்கிய நாடுகள் தூதராகவும் பணியாற்றுகிறார்.
உலக இளைஞர் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப வைபவம் ஹம்பாந்தோட்டை, மாஹம்புர ருகுனு சர்வதேச மாநாட்டு நிலையத்தில் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் இருந்து 1500 பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjt2.html
இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்படுவதில்லை: இன்னர் சிற்றி பிரஸ்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 05:05.56 PM GMT ]
இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்படுவதில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரேய்ன் உள்ளிட்ட ஏனைய நாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பபட்ட போதிலும் இலங்கை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதில்லை.
இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை உரிய கவனம் செலுத்தவில்லை என தாருஸ்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நிலைமைகள் குறித்து தாருஸ்மானிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjt5.html

Geen opmerkingen:

Een reactie posten