[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 04:39.09 PM GMT ]
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி, முதல் தகவல் அறிக்கை தம்மிடம் இருந்து பெறப்பட்டதாக பிரதான சாட்சியாளரான பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்ட ஹொட்டலின் முகாமையாளர்களில் ஒருவரான தரங்கா பீரிஸ் என்ற பெண் தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற கொலை தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து தங்காலை பொலிஸார் தம்மிடம் விசாரித்தனர்.
இதற்கு பதிலளித்த தாம், தனக்கு துப்பாக்கி செய்யத் தெரியாது, எனவே கொலைக்கு பயன்படுத்தப்பட்டது ரி-56 அல்லது வேறு துப்பாக்கி என்பதை தம்மால் கூறமுடியவில்லை என்று பொலிஸாரிடம் கூறியதாக பீரிஷ் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பிரதான சாட்சி, தமது சாட்சியத்தில் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டாம் என்று தம்மை துப்பாக்கிமுனையில் பயமுறுத்தியதாக சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து பொலிஸார் வாக்குமூலத்தின்போது கேள்வி எழுப்பியபோது துப்பாக்கியை தம்மால் அடையாளம் காணமுடியாது என்று குறிப்பிட்டதாக சாட்சி இன்று மன்றில் தெரிவித்தார்.
இதேவேளை கொலை செய்யப்பட்டவரின் நண்பியான விக்டோரியா, குற்றவாளி ஒருவரால் தாக்கப்பட்டதாக தாம் வாக்குமூலம் வழங்கியபோதும் அதனை தங்காலை பொலிஸார் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவு செய்யவில்லை என்று சாட்சி கூறினார்.
அதற்கு பதிலாக வேறு விடயங்களை பொலிஸார் பதிவு செய்ததாக குறிப்பிட்ட சாட்சியாளர், தாம் வழங்கிய வாக்குமூலத்தை தமக்கு வாசித்து காட்டாமலேயே தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் கூறினார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyERWLXht5.html
Geen opmerkingen:
Een reactie posten