[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 02:55.19 AM GMT ]
அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த மனவள ஆலோசனை அமையும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவமாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனவள ஆலோசனை திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், ஊனமுற்ற நபர்கள் ஆகியோருக்கு இவ்வாலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmt5.html
விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பது உண்மைதான்!- பசில் ராஜபக்ச
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 05:35.41 AM GMT ]
எனினும் வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை என்றும் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்து விடடதாக வெளிவந்த தகவல்கள் குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றேன்.
அந்தவகையிலேயே வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால் அவர் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.
வட மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாவிடினும் இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன.
எனவே அவ்வாறான விடயங்கள் குறித்து வட மாகாண சபை முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் தேவை உள்ளது.
அவர் தற்போது சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காவிடினும் முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் நான் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை.
விரைவில் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmuy.html
Geen opmerkingen:
Een reactie posten