தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

சர்வதேச விசாரணையை கெடுக்குமா தென்னாபிரிக்கா?

வாதப்பிரதிவாதங்களுக்கு நடுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கடந்த வாரம் தென்னாபிரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் சரவதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பதற்கான தீவிரமான முயற்சிகள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலிலேயே இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்வது உறுதியானதும், அந்தக் கட்சிக்கள் இருந்தே முதலில் எதிர்ப்பும் வெளிப்பட்டது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தான் இதற்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பியிருந்தார்.
அதாவது சர்வதேச விசாரணை முயற்சிகளைத் தடுப்பதற்காகவே தென்னாபிரிக்கா முயற்சிப்பதாகவும், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போகக்கூடாது என்றும் அவர் பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் அவ்வளவாக ஒத்துப் போகாதவரான சிவாஜிலிங்கம், இந்த எதிர்ப்பை நேரடியாகவே தமது கட்சியின் தலைமையிடம் எடுத்துக் கூறியிருக்கலாம்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட அதனை கூட்டமைப்புத் தலைமை கண்டுகொண்டிருக்காது.
எனவே தான், கூட்டமைப்புத் தலைமைக்கு எதிரான கருத்தை ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்த முயன்றார் சிவாஜிலிங்கம்.
ஆனால் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதேவேளை தமது பயணம் ஐநா விசாரணை முயற்சிகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இரா.சம்பந்தன் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
தமது தென்னாபிரிக்க பயணத்தால், சர்வதேச விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதற்கு, கூட்டமைப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டது என்பதை கடந்த வாரம் ஊடகங்களில் உலாவியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த நவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா கொழும்பு வந்திருந்த போது இலங்கையில் நல்லிணக்கத்தையும், நிலையான அரசியல் தீர்வையும் ஏற்படுத்த தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கூறியிருந்தார்.
அரசாங்கத்துடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் அவர் பேச்சுக்களை நடத்தியது, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் நோக்குடன் தான் என்பதில் சந்தேகமில்லை.
அதற்கு வசதியாகவே பின்னர் அவர் சிறில் ரமபோசா என்ற சிறப்புத் தூதுவரையும் நியமித்திருந்தார்.
தென்னாபிரிக்காவை, இந்த அரங்கினுள் நுழைய இடமளித்ததன் மூலம், இலங்கை அரசாங்கம் சாதகமான பெறுபேற்றை ஜெனிவாவில் அனுபவித்தது உண்மை.
அதாவது, இலங்கை விவகாரத்தில் தலையிட முயற்சிக்கும் நாடு என்பதால், வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க அந்த நாடு முடிவு செய்திருந்தது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்த தென்னாபிரிக்காவே, திடீரென இலங்கை அரசுக்குச் சார்பாக உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தியமை தமிழர் தரப்பிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியது உண்மை.
அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்கப் பயணம், சர்வதேச விசாரணையைப் பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியது.
தென்­னா­பி­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் தாம் மத்­தி­யஸ்தம் வகிக்கப் போவ­தில்லை என்றும், தமது அனு­ப­வங்­களை இரு­த­ரப்­பு­டனும் பகிர்ந்து கொள்ளப் போவ­தா­க­வுமே கூறி வரு­கி­றது.
அவ்­வா­றாயின், ஏதேனும் ஒரு பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டால் தான், அத­னூ­டாக எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை, தீர்வை அடை­யலாம் என்று தமது அனு­ப­வங்­களை தென்­னா­பி­ரிக்கா வெளிப்­ப­டுத்த முடியும்.
உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­பதில் இலங்கை அர­சாங்கம் நாட்டம் கொண்­டுள்­ள­தாக முன்னர் செய்­திகள் வெளி­யா­னது நினை­வி­ருக்­கலாம்.
ஆனால் இப்­போது, அத்­த­கைய உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­பது குறித்த எந்தப் பேச்­சையும் அர­சாங்கம் எடுப்­ப­தே­யில்லை.
அது­மட்­டு­மன்றி, ஜெனீ­வாவில் நடு­நிலை வகித்த இந்­தியா, ஜப்பான், தென்­னா­பி­ரிக்கா போன்ற நாடுகள் நம்­ப­க­மான ஒரு உள்­நாட்டுப் பொறி­மு­றையை அமைக்­கும்­படி, அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் செய்­திகள் உள்­ளன.
என்­றாலும் அதற்கு சாத­க­மான எந்த சமிக்­ஞை­யையும் இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­த­வில்லை.
தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சிகள் வெற்­றி­ பெற வேண்­டு­மானால், அதற்கு முதலில் ஒரு பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
அது உள்­நாட்டுப் பொறி­மு­றை­யா­கவே இருக்கும் என்றும், அதில் தாம் எவ்­வ­கை­யிலும் தலை­யிட மாட்டோம் என்றும் அந்த நாடு ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது.
இப்­போ­தைய நிலையில், அர­சாங்கம் அந்தப் பொறி­மு­றையை உரு­வாக்­கினால் தான், தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சிகள் முன்­ன­கர்த்­தப்­படும்.
அதே­வேளை, எந்­த­வொரு உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையும், தற்­போது ஜெனீ­வாவில் இருந்து முன்­னெ­டுக்­கப்­படும் சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றைக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என்றே கரு­தலாம்.
ஏனென்றால், ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில், இலங்கை அரசு நம்­ப­க­மான உள்­நாட்டு விசா­ர­ணை­களை நடத்தக் கோரி­யுள்ள நிலையில், அதற்குச் சம­மா­கவே சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் ஆணை வழங்­கப்­பட்­டுள்­ளது.
அது­மட்­டு­மன்றி, இலங்கை அர­சாங்­கத்தின் எந்த உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை­க­ளையும் கண்­கா­ணிக்­கவும், அது­பற்றி அறிக்கை சமர்ப்­பிக்­கவும் ஐ.நா மனி­த ­உ­ரிமை ஆணை­யாளர் பணி­யகம் பணிக்­கப்­பட்­டுள்­ளது.
எனவே, தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சியால், உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்டால் கூட, அது சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது.
இதை­விட, நம்­ப­க­மான ஒரு உள்­நாட்டுப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டு, அதன் ஊடாக, பொறுப்­புக்­கூ­றலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது இல­கு­வா­னது என்றே சர்­வ­தேச சமூகம் கரு­து­கி­றது.
ஐ.நா மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் பணி­யகம் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் சர்­வ­தேச விசா­ர­ணையின் முடிவு, இலங்கை அர­சாங்­கத்­துக்கு பாத­க­மாக அமை­யு­மானால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி இப்­போதே எழுந்­துள்­ளது.
ஏனென்றால், அந்த அறிக்­கை­யின்­படி, எவ­ரையும் தண்­ட­னைக்­குட்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்கும் அதி­காரம், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் பேர­வைக்குக் கிடை­யாது.
ஐ.நா. பாது­காப்புச் சபை­யிடம் மேல­திக நட­வ­டிக்­கைக்­காக அறிக்­கையை ஒப்­ப­டைக்க மட்­டுமே அதனால் முடியும்.
அங்கு வீட்டோ அதி­கா­ரத்தை வைத்து இலங்­கையைக் காப்­பாற்ற சீனாவும், ரஷ்­யாவும் இருக்­கின்­றன.
எனவே, சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை என்­பது, இப்­போ­தைக்கு போரின் போது நடந்த சம்­ப­வங்­களை வெளிக்­கொண்டு வர மட்­டும் உத­வுமே தவிர, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை சட்­டத்தின் முன் ­கொண்டு வரு­வ­தற்கும் தண்டனை பெற்றுக் கொடுப்­ப­தற்கும் எந்­த­ள­வுக்கு உதவும் என்று அனு­மா­னிக்க முடி­ய­வில்லை.
அதே­வேளை, நம்­ப­க­மான உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றின் மூலம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டால், அதனை இலங்கை அர­சாங்­கத்தை வைத்தே நடை­மு­றைப்­ப­டுத்த முடியும்.
அதற்­காகத் தான், இது­வரை மேற்கு நாடுகள் உள்­ளகப் பொறி­மு­றையை வலி­யு­றுத்தி வந்­தன.
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைக்கச் செய்து அதை முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும் ஒரு பகு­தி­யை­யா­வது நடை­மு­றைப்­ப­டுத்த வைப்­பதில் சர்­வ­தேச சமூகம் வெற்றி கண்­டுள்­ளது.
அது­போ­லதான், தென்­னா­பி­ரிக்க பாணி­யி­லான உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு போன்ற உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கவே, சர்­வ­தேச சமூகம் முயற்­சிக்­கி­றது.
ஒரு­பக்­கத்தில் சர்­வ­தேச விசா­ரணைப் பொறிமுறைக்கு ஆதரவு கொடுத்தாலும், பலம்மிக்க நாடுகள் தென்னாபிரிக்காவினது முயற்சிக்கும் பின் கதவால் ஆதரவு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால், அது அவற்றின் மீதான சுமையைக் குறைக்க உதவும்.
இந்தப் பின்னணியில், தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தப் பயணத்தின் மூலம், உடனடியாக ஒரு விசாரணைப் பொறிமுறைக்கு இலங்கை அரசு இணங்கும் என்று கூறுவதற்கில்லை.
ஏனென்றால், சர்வதேச சமூகம் தனது கையை வைத்தே தன்னை குத்தப் போகிறது என்று புரிந்து கொள்வதற்கு இலங்கை அரசுக்கு அதிக நேரம் தேவையில்லை.
ஆனால், அதைத் தவிர்க்க முடியாது என்ற கட்டம் ஒன்று வரும் போது மட் டுமே, இலங்கை அரசு அதுபற்றிய இணக்கப்பாட்டுக்கு வர முனையும்.
இப்போதைய நிலையில், அத்தகைய இணக்கப்பாடு ஒன்று ஏற்படுவதற்கு முன்னர், சர்வதேச விசாரணை பாதிக் கிணற்றைக் கூடத் தாண்டி விடக் கூடும்.
-–சத்­ரியன்
http://www.tamilwin.com/show-RUmsyESXLXloy.html

Geen opmerkingen:

Een reactie posten