தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

கோபி, அப்பன், தேவியனின் இரத்தமாதிரிகளில் பரிசோதனை! இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி

சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ராஜா மஹேந்திர ராஜ நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது. உடற்பாகங்கள் மற்றும் இரத்தமாதிரிகள் பதவிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கதிரேஷன் கோவிலின் குருக்கள் ஞானசந்திரன் இறுதி கிரிகைகளை நடத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எவரும் மயானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.எனினும் இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூன்று சடலங்களும் இந்து முறைப்படி அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/65485.html

Geen opmerkingen:

Een reactie posten