[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 07:23.25 AM GMT ]
லக்பிம பத்திரிகையில் வெளியான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய தலைப்புச் செய்தி தொடர்பான பிரச்சினை சம்பந்தமாகவே வகாஆராச்சி புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி வெளியான பத்திரிகையின் 8 ஆம் பக்கத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சேவா வனிதா சங்கத்தின் புதுவருட சந்தை சம்பந்தப்பாக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கோத்தபாயவின் மனைவி காணப்பட்டதுடன், அது தொடர்பான செய்தியில் புகைப்படத்திற்கு அருகில் “இது போலி நாணயத்தாள் இல்லை தானே” எனக் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து மறுதினம் பத்திரிகையில் அதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, லக்பிம பத்திரிகை ஆசிரியர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பட்டுள்ளார்.
வகாஆராச்சி, சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்பகால ஏற்பட்டாளராவார். அத்துடன் அவர் தற்போது ஊடக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnr0.html
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு!
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 04:30.29 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத இளைஞர்களையும் இலங்கை இராணுவத்தில் சேர்ப்பதற்காக இராணுவத்தினர் கிழக்கு மாகாணத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.
முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்களது குடும்பங்களுடன் இணைந்திருக்கும் போராளிகளை அண்மைக்காலமாக இராணுவத்தில் சேருமாறு விடுக்கும் எச்சரிக்கை தொடர்பாக கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்திலே அண்மையில் புலிப் பூச்சாண்டி காட்டிய அரசாங்கம் தற்போது அதனொரு பகுதியாக கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறானதொரு தோற்றப்பாட்டினை காட்டி மக்களை மீண்டும் மீண்டும் தமிழர்களை அச்சநிலைக்கு உட்படுத்தும் செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்திலே திருக்கோயில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில இடங்களில் தமிழர்கள் மறுமமான முறையில் காணாமல் போயிருக்கின்றார்கள். அதன் பின்னரும் அப்பிரதேசத்தில் இருந்து கால்நடை வளர்ப்பிற்காகச் சென்றிருந்தவர்களை காட்டிற்குள் வைத்து கறுப்பு சீருடை அணிந்த ஆயுதம் தாங்கிய நால்வர் இவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து இவர்களை துன்புறுத்தியிருக்கின்றார்கள்.
அதன் பின்னர் அந்தப் பாதையினால் உளவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து இவர்கள் கூக்குரல் இட்டதன் மூலமே இவர்கள் அந்த இடத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள் அதன் பின்னர் தக்கப்பட்டவர்கள் உடனடியாக திருக்கோயில் பிரதேச பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டினையும் செய்திருக்கின்றார்கள்.
இச்சம்பவம் நடந்த இடமானது முழுக்க முழுக்க இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான பிரதேசமாகும் இங்கு இந்த நாசகார வேலைகளை செய்பவர்கள் யார் என்பதனை இதுவரைக்கும் கண்டறியாமல் இருப்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
தமிழ் மக்கள் பல அழிவுகளைக் கண்டவர்கள் அதற்குள் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தியவர்கள் அந்த வலியினை உணர்ந்ததன் காரணமாக இனிமேலும் அந்த அழிவு என்ற பாதைக்குப் போகாமல் ஜனநாயக வழியிலே எமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்றுதான் இன்று அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இதனை புரிந்து கொள்ளாத அரசாங்கமும், அரச புலனாய்வுப் பிரிவினரும் இந்த நாட்டிலே மேலும் ஒரு பிரச்சினை உருவெடுக்கப்போவதாக உலகிற்குக் காட்டுவதற்காக அவர்களினால் புனையப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் நிமிர்த்தம் அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் மிகவும் அச்ச நிலையிலேதான் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினரினால் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இருப்பவர்களையும் ஒன்றுமே தெரியாத அப்பாவி தமிழ் இளைஞர்களையும் இராணுவத்தில் சேருமாறு நிர்ப்பந்தித்து இருப்பதன்மூலம் இனியும் ஒரு இருண்ட யுகத்திற்கு எம்மினம் தள்ளப்பட்டு விடுமோ என்ற நிலைப்பாட்டினையும் இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான இந்த கசப்பான சம்பவங்களினால் பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவதைப்போல் இருப்பதாகவும் நோக்கவேண்டி இருக்கின்றது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnt1.html
Geen opmerkingen:
Een reactie posten