தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

சர்வதேச விசாரணைக்கு EU பாரிய அழுத்தம் !

சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. சாட்சியங்கள் மற்றம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

எனினும், சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த கவல்களை இரகசியமாக பேண வேண்டியது அவசியமானது எனவும், அவர்களது தகவல்களை வெளியிடுவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமனெ வலியுறுத்தியுள்ளார்.
சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை இருபது ஆண்டுகளுக்கு வெளிப்படுத்த போவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தகவல்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65038.html

Geen opmerkingen:

Een reactie posten