இவரே கனடா வெளிவிவகார அமைச்சுத் தொடர்பான எதிரணியின் பிரதான விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “இலங்கையின் துன்பியல் யுத்த்தின் போது புரியப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணைக்கு கனடா வாழ் தமிழ்க் குழுக்கள் வலியுறுத்தி வந்தன. இலங்கை அரசு தவறான குற்றச்சாட்டுக்கள் மூலம் அவர்களை இப்போது குறி வைக்கின்றது.
எங்கள் சிவில் சமூகத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் வெளிநாட்டு அரசு ஒன்று அவதூறுக் குற்றச்சாட்டு முன்வைக்கையில் கனேடியர்கள் அதைச் சகித்துக்கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள். “கனேடியத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுக்கும் அவதூறுப் பிரசாரத்தை ஒட்டி, அந்த மக்களுக்காக நாம் ஏதேனும் செய்யும் விடயத்தில் கனடா அரசும் எங்களுடன் நிற்குமா?” – என்று கனேடிய நாடாளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் பதிலளித்தார்.
“கொழும்பில் நாம் காணும் விடயங்கள் தொடர்பில் உலகின் ஏனைய எந்த நாடுகளையும் விட பலமான பிரதிபலிப்பை கனடா அரசு வெளிப்படுத்தியது என்பதில் எல்லாக் கனேடியர்களும் வியப்புக்குரிய வகையில் பெருமை அடைய முடியும்.” “இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைக்காக நாங்கள் பலமாகப் போராடினோம். மனித உரிமை மீறல்கள், இலங்கை அரசின் தீவிரமடைந்து வரும் எதேச்சதிகாரப் போக்குக் குறித்தெல்லாம் நாம் உறுதியுடன் போராடினோம்.
இலங்கையை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவதில் தமிழ்ச் சமூகமும் முழு அளவில் பங்களிக்கக் கூடியதான மீள் நல்லிணக்கத்துக்காக நாங்கள் வலுவாக யுத்தம் செய்தோம்.” “இவ்விடயத்தில் கனடா அரசைப் போலவே, கனேடியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம் என்றாலும், தமிழர்கள் அங்கு தமது அயலவர்களுடன் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உதவுவதை முக்கிய இலக்காகக் கொண்டு அது குறித்தே நாம் கவனித்து வருகின்றோம்.” என்றார் அவர்.
Geen opmerkingen:
Een reactie posten