தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 april 2014

இறுதி யுத்தத்தில் அவசரமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒழுக்கமற்ற இளைஞர்களால் இராணுவத்துக்கு சிக்கல் !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தின் போது அவசர அவசரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவத் துருப்பினரால் தற்போது இராணுவம் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் கேகாலை பகுதியில் போலி நாணய தாள்களுடன் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தை கூட்டுமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய இராணுவ பேச்சாளர்,
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ ஒழுக்கங்கள் தொடர்பில் எதுவுமே தெரியாத சில இளைஞர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர்களே தற்போது இராணுவத்தை களங்கத்துக்கு உட்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhx1.html

Geen opmerkingen:

Een reactie posten