நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை தோற்கடிக்க முடியும் என முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்காதமைக்கும், ஜெனிவா தீர்மானத்திற்கும் இடையில் தொடர்புள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரணமாக நாடுகளில் பொதுத் தேர்தல் அல்லாத ஏனைய தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கையானது குறைந்தே காணப்படும்.
18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தேர்தலில் வெல்ல முடியவில்லை என ஒரு சிலர் கூறுகின்றனர்.
இவை அனைத்து இருந்தும் வடக்கில் பெருமளவிலான படையினர் இருந்தும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள். அவ்வாறான வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் மக்கள் வாக்களிக்க எண்ணுவதில்லை.
நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீதான் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.
பிரதான எதிர்க்கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கையில்லை. இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படாது போனால் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி நடந்தால், வெளியுலக சக்திகளால் நாட்டை இலகுவாக தோற்கடிக்க முடியும்.
மக்களை மயக்க வேண்டுமாயின் அரசாங்கம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், கவர்ச்சிகரமான, மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட மாற்று எதிர்க்கட்சி உருவாக வேண்டும்.
அப்படியில்லாமல் படித்த , புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி சர்வதேச ரீதியில் போட்டியிடுவது என்ற கேள்வியை தான் நாம் கேட்க வேண்டும் என்றும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETWLWgq3.html
Geen opmerkingen:
Een reactie posten