விசாரணை நடாத்தும் அதிகாரம் நவனீதம்பிள்ளைக்கு கிடையாது!– கோமின் தயாசிறி
இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணை நடாத்தும் அதிகாரம் கிடையாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையையும் எற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நவனீதம்பிள்ளைக்கு இல்லாத அதிகாரமொன்றை அமெரிக்கா இந்த தீர்மானத்தின் ஊடாக வழங்க முயற்சித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங் கிடையாது.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் குறுகிய நோக்கத்திற்காக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
ஜெனீவா பிரச்சினையின் போது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் விரும்பத்தக்கவையாக அமையவில்லை.
எனினும், இந்த நேரத்தில் அவற்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகாது.
நாடு என்ற ரீதியில் ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுப்பதே தற்போதைய தேவையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 04:29.18 AM GMT ]
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்தமையானது தனக்கும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நவனீதம்பிள்ளையினால் நடத்தப்படும் விசாரணைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.
நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதுடன் இன நல்லிணக்கத்திற்கும் கேடு ஏற்படலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளது.
உள்ளக ரீதியாக விசாரணைகளை நடாத்தக் கூடிய தகுதியானவர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி மனவேதனையை தருகிறது: கரு ஜயசூரிய
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 09:34.48 AM GMT ]
இதனால் இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்பட போவதில்லை எனவும் இந்த பிரச்சினையில் அரசாங்கத்திற்கு உதவி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிந்தே தோல்வியடைந்த அரசாங்கத்தின் முதலை கண்ணீருக்கு ஏமாற வேண்டாம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கரு ஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்படியான பிரேரணை இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியது.
ஆனால் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியன் மூலம் அரச இயந்திரத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்திற்கு அரசாங்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அரசாங்கத்தின் இவ்வாறான ஒருதலைப்பட்சமான நடவடிக்கை காரணமாக அயல் நாடுகளும் ஜனநாயக நாடுகளும் இலங்கை விட்டு தூர விலகியுள்ளன.
இதனால் அரசாங்கம் தற்போதாவது அடக்குமுறை, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதுவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல,
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இவ்வாறான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.
அரசாங்கம் 2009 ஆம் ஆண்ட ஐ.நா மனித உரிமை பேரவையிடம் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து இம்முறை கொண்டு வரப்பட்ட பிரேரணையில் முதல் பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அயல் நாடுகளை கைவிட்டு ஆப்பிரிக்கா நாடுகளின் பின்னால் ஓடினார். ஆனால் பிரேரணைக்கு எதிராக இலங்கை ஆதரவாக இரண்டு ஆப்பிரிக்க நாடுகளே வாக்களித்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 12 நாடுகள் இலங்கையை போன்ற ஜனநாயக நெருக்கடியை சந்தித்த நாடுகள். எந்த ஜனநாயக நாடும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தோல்வி - அரசாங்கத்தின் முதலை கண்ணீருக்கு ஏமாற வேண்டாம்: ரில்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 10:00.32 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவா மனித உரிமை பேரவையில் அரசாங்கம் தெரிந்தே தோல்வியடந்துள்ளதுடன் அதனை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வருகிறது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை அமெரிக்காவே வெற்றியடைய செய்துள்ளது. இலங்கை தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகள் செயற்படும் விதம் குறித்து நாம் விமர்சனங்களை கொண்டுள்ளோம். அவ்வாறு நடந்து கொள்வதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
இந்த நாடுகளின் பிரதான நோக்கம் மனித உரிமை பாதுகாப்பதல்ல. மனித உரிமை என்ற போர்வையில் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட அவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும்.
ஏகாதிபத்திய நாடுகளின் தலையிடு தவறு என்பது போலவே இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இதனால் இரண்டு தரப்பை ஒரு பக்கம் வைத்து ஆராய வேண்டும்.
இலங்கைக்கு எதிரான பிரேணைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை வெற்றிப்பெற செய்ய அரசாங்கம் தவறியுள்ளது.
சர்வதேச தளத்தில் வெற்றியை பெற அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது. நாட்டை சர்வதேச தளத்தில் அரசாங்கம் அசௌகரியத்திற்கு உட்படுத்தியுள்ளது. இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் ஜெனிவாவில் இலங்கை தோல்வியடைந்தது.
ஜெனிவா பிரேரணையை தோற்கடிப்பதற்கு பதிலாக அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான வகையில் அதனை அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது என்றார்.
இலங்கை தீர்மானம்: மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி பாராட்டு!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 02:54.28 PM GMT ]
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சுப்பிரமணியசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சுப்பிரமணிய சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten