தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 juni 2011

சனல் 4 போர்க்குற்ற காணொளி - நியூயோர்க்கில் விளக்கம் சொன்ன சவீந்திர சில்லா

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 09:03.55 AM GMT ]

நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்.
இவர்களுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை அழைப்பு விடுக்காத போதும், போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ள ஒரேஒருவர் என்ற வகையில் கருத்துகளை வெளியிடப் போவதாக கூறி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தக் கூட்டத்தைக் குழப்ப முயன்றார்.
சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படம் போலியானது என்றும் இது சிறிலங்காவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் காட்டுப்பகுதி ஒன்றில் புலிகளின் நிலைகள் மீது விமானங்கள் குண்டு வீசும்போது பிடிக்கப்பட்டு சிறிலங்கா விமானப்படையினால் வெளியிடப்பட்ட காணொலிப்பதிவு ஒன்றை, பொதுமக்கள் மீது குண்டு வீசப்படுவது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பொய்யான தகவல்களின் மூலம் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த அனைத்துலக உதவி நிறுவனங்கள் முற்படுவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார். அழையா விருந்தாளியாக நுழைந்த சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் இந்த நிகழ்வில் பரப்புரைகளைச் செய்தது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளை வெறுப்படைய வைத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Geen opmerkingen:

Een reactie posten