தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 juni 2011

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்முறைகள் நடந்திருப்பதை பாலித கொஹண ஏற்றுக்கொண்டுள்ளார்: சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 04:28.38 PM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பாலித கொஹண ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி சர்வதேச மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்ட விடயம் குறித்துப் பிரஸ்தாபித்துள்ளார்.
இலங்கையின் கொலைக்களம் காணொளி திரையிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காணொளியைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கொஹண ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததார்.
இலங்கையின் கொலைக்களம்' என்ற சனல்-4 தொலைக்காட்சியின் விபரணப்படத்தினை நியூயோர்க்கில் அமைந்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஐ.நா பணியகத்தில்
திரையிடுவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அங்கு அதனைப் பார்ப்பதற்காகக் கூடியவர்களது அளவுக்கு அதிகமான எண்ணிக்கைதான் எங்களுக்குக் கவலையினைத் தந்தது.
மன்னிப்புச்சபையின் நியூயோர்க் செயலகத்தில் இந்த ஆவணப்படத்தினைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த பெருந்திரளான பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வளவு காத்திரமான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
2009ம் ஆண்டு சிறிலங்காவினது இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் பிரித்தானியாவில் சணல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த ஆவணப்படம் பின்னர் அதனது இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.
கலாநிதி பாலித கோகன்ன மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையிலான 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்த ஆவணப்படத்தினை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவின் படமும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சரணடைவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொலைசெய்தாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. 
குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்தக் ஆவணப்படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்க்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் என்றும் அந்த அதிகாரி தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten