[ புதன்கிழமை, 29 யூன் 2011, 01:45.19 PM GMT ]
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் களமுனைக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்படக் காரணமாக அமைந்து விட்டதாக அரசாங்கத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
தாருஸ்மான் அறிக்கை மற்றும் சனல்4 காணொளி என்பவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தயாரிக்கும் இரண்டு அறிக்கைகளில் ஒன்றிலேயே பிரஸ்தாப விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் திகதி நண்பகலே அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது.
ஆயினும் களமுனையில் கடுமையான யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், அத்தகவல் உரிய நேரத்தில் களமுனையின் கட்டளை அதிகாரிகளைச் சென்றடையவில்லை. அதன் காரணமாகவே மோதலின் போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் வன்னி யுத்த காலகட்டத்தில் மருந்துப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கும் பொறுப்பு பசில் ராஜபக்ஷவிடமே இருந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரஸ்தாப அறிக்கை மூலம் இதுவரை காலமும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலைமாறி தற்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயரும் அதில் உள்ளடக்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten