தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 juni 2011

ஆயுததாரிகள் மிரட்டலால் மாரடைப்பில் இறந்தார் அன்ரன் பாலசிங்கத்தின் மைத்துனர்

06 June, 2011 by admin
விடுதலைப்புலிகளின் அரசியல் அலோசகரான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் மைத்துனர் இனந்தெரியாத ஆயுததாரிகள் விடுத்த கொலைமிரட்டலின் விளைவாக இன்று அதிகாலை மரணமாகினார். அன்டன் பாலசிங்கத்தின் சகோதரியை திருமணம் செய்த கந்தையா கனகரட்ணம் என்பவர் நெல்லியடியிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவரது இரு மகன்மாரையும் தம்மிடம் ஒப்படைக்கும் படியும் தவறும் பட்சத்தில் படுகொலை செய்யப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட அதிர்சியில் மாரடைப்பிற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு மேலதிகத் தகவல்களும் எதிர்ப்பார்க்கப்படுகிறது

Geen opmerkingen:

Een reactie posten