தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 juni 2011

விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பான விசாரணை அறிக்கையை இலங்கையுடன் பரிமாறிக் கொள்ள நெதர்லாந்து இணக்கம்

[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 10:44.29 AM GMT ]
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை இலங்கையுடன் பரிமாறிக் கொள்ள நெதர்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
 நெதர்லாந்து விசேட புலனாய்வாளர்கள் கடந்த ஒருவருட காலத்துக்கும் அதிகமாக மேற்கொண்ட விசாரணைகளில் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான பல முக்கியமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல முக்கியமான தகவல்களையும் நெதர்லாந்து விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
மேலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கப்பம் சேகரித்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் நெதர்லாந்து விசேட விசாரணைப் பிரிவினர் பல சந்தர்ப்பங்களில் கைது செய்திருந்தனர்.
இவ்வாறான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தகவல்கள் கொண்ட விசாரணை அறிக்கையையே தற்போது இலங்கையுடன் பரிமாறிக்கொள்ள நெதர்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten