[ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 11:04.47 AM GMT ]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்திருக்கும் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களில் ஒருசிலர் மட்டுமே அகதி அந்தஸ்தைப் பெறத் தகுதியானவர்கள் என்று குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவ்வாறு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுத் திருப்பியனுப்பபப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தியாறு என்றும், அதில் பதினைந்து தமிழர்கள், ஏழு முஸ்லிம்கள், நான்கு சிங்களவர்கள் உள்ளடங்குவதாகவும் குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் தெரிவிக்கின்றார்.
நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களுக்கான வீசாவில் பிரிட்டன் சென்று வீசா காலாவதியான பின்னரும் அங்கு தங்கியிருக்க முயற்சித்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயினும் அவ்வாறு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டவர்களில் ஒருசிலர் அகதி அந்தஸ்துப் பெறக்கூடிய தகுதிகளைக் கொண்டிருப்பதாகவும் சூலானந்த பெரேரா தனிப்பட்ட முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதற்கிடையே நாடுகடத்தப்பட்ட அகதிகள் தொடர்பான விசாரணைகளை விமானநிலையத்தில் வைத்தே புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதுடன், பல மணி நேரங்கள் வரை ஒவ்வொருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:
Een reactie posten