28 June, 2011
அரசாங்கமானது பொதுமக்களைக் கொன்றுகுவித்தபோது, செழுமையைப் பாதுகாத்து உதவுவது அவர்களுக்குக் கட்டாயமாக இருந்தது, அட்டூழியம் குறித்து உலகத்தின் முக்கிய கருத்து என்ன? எவ்வளவு அட்டூழியம் செய்தால் சர்வதேச சமூகம் அந்நாட்டுத் தலைவர்களை போர்க் குற்ற விசாரணை செய்யும்? 1990 களில் போஸ்னியாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச அமைதிப்படையினரே சாட்சியாக இருந்தனர். இரு செர்பியத் தலைவர்கள் போர்க் குற்ற விசாரணைகளைச் சந்தித்துள்ளனர். இதேபோல ருவாண்டாவில் 1994 இல் நடந்தட் மில்லியன் கணக்கான மக்களின் கொலைக்கு, ருவாண்டாவைச் சேர்ந்த 100 பேரை ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்ற நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. சூடான், லிபியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் நடந்துள்ள நிலையில், இலங்கையில் நடந்துள்ள படுகொலைக்கு என்ன நடக்கப் போகிறது?
இங்கு புலிகள் என்று கூறி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்த சூனியப் பிரதேசம் என்று கூறிவிட்டு பின்னர் அப்பிரதேசங்களில் ஷெல் வீசி மக்கள் கொல்லப்பட்டனர். இது இலங்கையின் செரெபிரனிக்கா� என்று இலங்கையில் ஐ.நா பேச்சாளராக இருந்த அவுஸ்திரேலியரான கோர்டர்ன் வெய்ஸ் தெரிவித்தார். இப்போது ஐ.நா பதவியை விட்டு விலகிவிட்ட வெய்ஸ், தி கேஜ் (கூண்டு) என்ற இலங்கைப் போர் குறித்த ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கைப் போர் எவ்வாறு கொலைக்களமாக இருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
கடந்த வாரம் சனல் 4 வெளியிட்டுள்ள வீடியோவிலும் இலங்கைப் போரின் கொடூரங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கொலை, கற்பழிப்பு, கடத்தல், மிரட்டல் என அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரைக்கும் இலங்கையோ தாம் நாலாம் கட்ட
ஈழப்போரில் போர்க் குற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவுமே இல்லை என்கிறது. சனல் 4 வீடியோ பல நாட்டவருக்கும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டும் இலங்கை விடயத்தில் மௌனம் இருப்பதன் மர்மம் தான் என்ன? ராஜபக்ஷர்களுக்கு எதிராக வழக்கு எழும் இக்காலகட்டத்தில், கோர்டன் வெய்ஸ் போன்ற நபர்கள், இந்தோனேசியாவில் ஏராளமான
கால்நடைகள் கொல்லப்பட்டபோது மட்டும் வெகுண்டெழுந்த அவுஸ்திரேலியர்கள், இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது பேசாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Geen opmerkingen:
Een reactie posten