தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 juni 2011

பாரிசவாத, மனநோயாளி செய்தி வெளியிட்டார்: வதந்திகளைப் பரப்பும் இணையம் !

 
21 June, 2011 by admin

"இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றங்களை இழைக்கவில்லை நோர்வே பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் சொல்க் ரோவின்". இதுதான் தமிழ்வின் இணையத்தில் வெளியான செய்தி. இவ்வாறான ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு 2004ம் ஆண்டு சமாதான காலப் பகுதியில், சில தமிழர்களைப் பயன்படுத்தி பெயரளவில் ஆரம்பித்தது. பின்னர் அதுவும் செயலிழந்துபோனது. மனநோயால் பீடிக்கப்பட்ட ஒரு நோர்வே நாட்டவர் வைத்தியசாலையில் இருக்கும்போது அவர் பெயரால் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாம். இப்போது அவரின் பெயர் பயன்படுத்தப்பட்டு இவ்வறிக்கைகள் அவர் விடுவதுபோல செய்திகளைப் பிரசுரித்துள்ளது தமிழ் வின் இணையம்.

இந்த அறிக்கையை வெளியிட்டதாகச் சொல்லப்படும் இந் நபர் தற்போது பாரிசவாத நோயால் பீடிக்கப்பட்டதோடு, நிரந்தர மனநோயாளியாகியும்விட்டார். இந் நிலையில் அவர் சொன்னார் என்று சொல்லி, ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ் வின் இணையம். இந்த "அவர்" வேறு யாரும் இல்லை "சொல்க் ரோவின்" தான். சொல்க் ரோவின் அவர்கள் பெரிய அமைப்பு ஒன்றின் தலைவர் போலவும் அவர் கருத்துரைத்தது போலவும், யாருடைய கருத்தை தமிழ் வின் இணையம் வெளியிட்டுள்ளது ? தமிழ் வின் வெளியிட்டுள்ள செய்தியில் இலங்கை போர் குற்றம் புரியவில்லை, புலிகள் தான் போர் குற்றம் புரிந்தனர் என்று சொல்லியிருக்கிறது.

அத்தோடு நின்றுவிடாமல், வயதான காலத்தில் தானும் தன்பாடாகவும் இருக்கும் காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்களையும் ஒரு போர்க்குற்றவாளி என்று செய்தி வெளியிட்டுள்ளது இவ்விணையம். புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்களுக்கு கழுத்தில் நஞ்சு மாலையை அடேல் பாலசிங்கம் அவர்கள் அணிவிக்கும் வீடியோக் காட்சிகள் தம்மிடம் இருப்பதாக, சொல்க் ரோவின் தெரிவித்துள்ளாராம் என இது செய்தி வெளியிட்டுள்ளது. வீடியோ இருக்கலாம் ஆனால் அதனைப் பார்க்கவோ இல்லை உணரும் நிலையில் சொல்க் ரோவின் இல்லையே ....

இது யாருடைய தூண்டுதலில் நடந்திருக்கிறது? படுத்த படுக்கையில் இருக்கும் ஒரு மனநோயாளி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள தமிழ் வின் இணையம் தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளது. இச் செய்தி ஆங்கில ஊடகங்களிலோ, இல்லை சிங்கள ஊடகங்களிலோ அல்லது நோர்வே ஊடகங்களிலோ இதுவரை வெளியாகவில்லை. அப்படியாயின் இச் செய்தி எங்கிருந்து வந்தது ? அதன் "மூலம்" என்ன என்பதனை இவர்கள் ஏன் வெளியிடவில்லை?

இதனை வெளியிட முடியுமா ? அப்படி வெளியிட முடிவில்லை என்றால் தமிழ் வின் இணையம் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் ... குறைந்தபட்சம் இச் செய்தியில் உண்மை இல்லை என்பதனையாவது அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் செய்வார்களா?

Geen opmerkingen:

Een reactie posten