தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !
23 June, 2011 by adminதிடீரென மண்டபத்துக்குள் நுளைந்த சவீந்திர சில்வா தான் இறுதி யுத்தத்தில் நின்றவன் என்றவகையில் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். முதலிலேயே தயார்செய்யப்பட்ட சில ஆவணங்களோடு வந்த அவர், தமிழ் வாணி பொய்யுரைப்பதாகவும் அவர் இலங்கை ஏன் சென்றார் என்று அவருடைய பெற்றோருக்கே தெரியாது என்று சற்றும் சம்பந்தமில்லாமல் பிதற்றியுள்ளார். தமிழ்வாணி ஐக்கிய ராட்சிய பஸ்போட் வைத்திருந்ததால் அவரைத் தாம் பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததாகவும் கூறினார். பின்னர் அப்படியே வைத்தியர்கள் பக்கம் அவர் பார்வை திரும்பியது. சனல் 4கில் ஒரு வைத்தியர் தன் கண்டதைப் பதிவுசெய்திருந்தார்.
அதனைப் பொய் எனக் கூறிய சவீந்திர சில்வா, இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்பதனை ஒரு முறைகேளுங்கள் எனக் கூட்டலிட்டார். சனல் 4 தொலைக்காட்சியில் மக்கள் விமானக் குண்டுவீச்சுக்கு பயந்து பதுங்கு குழிகளுக்குள் ஒளியும் காட்சியும் வெளியாகியிருந்தது. அதனையும் முற்றாக மறுத்த சவீந்திர சில்வா இது ஒரு திரைப்படம் எனவும் சினிமா காட்சிகள் எவ்வாறு எடுக்கப்படுமோ அதுபோல எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் காட்டுப்பகுதி ஒன்றில் புலிகளின் நிலைகள் மீது விமானங்கள் குண்டு வீசும்போது இலங்கை விமானப்படையால் எடுக்கப்பட்ட வீடியோவை சனல் 4 மாற்றி அமைத்து பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது போல வெளியிட்டுள்ளது என கூட்டலிட்டார் சவீந்திர சில்வா.
இக் கூட்டத்துக்கு சவீந்திர சில்வாவை அனைத்துலக மன்னிப்புச் சபை அழைக்கவில்லை. இருப்பினும் அவர் அங்கே வந்து தனது கருத்துகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதனை எவரும் தடுக்கவும் இல்லை. இவர் தெரிவித்த கருத்துகளின் படி 1 முறைகூட இலங்கை அரசு பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை என்ற பொருள்பட இருந்தது. அப்படி என்றால் 40,000 பொதுமக்களை "முனியா" அடித்துக் கொண்றது ?
இல்லீங்க புலிதாங்க கொன்றது என்கிறார்!!
Geen opmerkingen:
Een reactie posten