தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 juni 2011

யாழ். தமிழர்கள் மீதான தாக்குதல் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - தங்கபாலு கோரிக்கை

[ சனிக்கிழமை, 18 யூன் 2011, 09:33.59 AM GMT ]
இலங்கை தமிழர்களுக்கு எதிராக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் இலங்கை ராஜபக்சே அரசின் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங்கை பெரிதும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.
அங்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை சீர்குலைக்க எத்தனிக்கும் இலங்கை அரசின் இப்போக்கு ஜனநாயகத்திற்கு விடும் சவாலாகும். அமைதியாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது சீருடை அணிந்த இராணுவத்தினர் காரணமின்றி தடியடி நடத்தி விரட்டியுள்ள செயல் மனிதாபிமானமற்ற சர்வாதிகாரத்தனமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை இருக்கிறபோது பொதுமக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten