தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juni 2011

நடேசன் சரணடைய வந்தது புலிகளுக்குத் தெரியாதாம்: அமெரிக்கா !

யுத்த குற்றங்கள் நடந்ததாக அமரிக்க அதிகாரிகள் கூறினால் ஆமோதிக்கும் அதிர்வில் இப்படியுமொரு செய்தி!!பக்கசார்பென்பது இதுதானோ?!செய்மதியை காட்டியதும் அமரிக்காதான்,இதை சொல்வதும் அமரிக்காதான்.எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காணாத அதிர்வுக்கு அனுதாபங்கள்!!
04 June, 2011 by admin
மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் இலங்கை ஒன்றிணைந்த இராணுவ போர் நடவடிக்கைகள் (ஓகஸ்ட் 2006 - மே 2009) பற்றிய கருத்தரங்கில் பங்குபற்றிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் கேணல் லோரன்ஸ் ஸ்மித், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து, குறிப்பாக வெள்ளைக் கொடி விவகாரம் குறித்த குற்றச்சாட்டின் மிகவும் அடிப்படையான விடயம் பற்றி புதன்கிழமையன்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் குறித்து ஓய்வுபெற்ற இந்திய ஜெனரல் அஷோக் குமார் மேத்தாவின் கேள்விக்கு பதிலளிக்கையில், இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக அரசியல்துறைப் பொறுப்பாளரான நடேசன் மேற்கொண்ட முயற்சிகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராய வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கூறினாராம்.

கடைசிக் கட்டத்தில் சண்டையில் ஈடுபட்டவர்களின் கட்டளையுடன் எதையுமே செய்திருக்காத நபர்களிடம் இருந்தே இந்த சரணடையும் முடிவு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மேற்படி கருத்தரங்கில் பங்குபற்றிய அப்போதைய 58 ஆம் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடமே இந்திய ஜெனரல் கேள்விகளைக் கேட்ட போதிலும், அமெரிக்க அதிகாரி தன்னிச்சையாக இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் கே.பி அல்லது நடேசன் புலிகளின் ஆரவாரப் பேச்சாளர்களாக மட்டும் இருந்தது தவிர, அவர்கள் தலைமைத்துவத்திலோ அல்லது புலிகளின் சண்டையிடும் ஆற்றலிலோ எதுவித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரி ஸ்மித் கூறியுள்ளாராம். ஆகவே ஒரு முடிவுக்கு வர முன்னர் இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றுள்ளார் அவர்.

இதேவேளை வெள்ளைக்கொடி விவகாரம் பற்றிய வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்த ஷவேந்திர சில்வா, மேற்கொண்டு கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதேவேளை, சண்டை முடிவதற்கு முதல் நாளான மே 17, 2009 அன்று தமது 53 ஆவது படையணியை உடைத்துக்கொண்டு காட்டுக்குள் தஞ்சம் புகுவதற்காக புலிகள் நடத்திய இறுதித் தாக்குதல் தங்களால் தோற்கடிக்கப்பட்டதாகவும், இதில் விடுதலைப் புலிகள் தலைவரின் மகன் சார்ள்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார் ஷவேந்திரா.

புலிகளின் சண்டைப் பிரிவினரின் சம்மதம் இல்லாமல் சில வெளிநாட்டு மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் இந்த சரணடையும் முடிவுக்கு நடேசன் வந்திருக்கலாம் என்றும், ஆனால் இதே சரணடையும் முடிவை பொட்டு அம்மான் அல்லது சூசை எடுத்திருந்தால் அன்றைய சூழ்நிலை வித்தியாசமாக இருந்திருக்கும் என்றும் அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர். ஆகமொத்ததில் தான் புலிகளுக்கு அருகில் இருந்து பார்த்தது போல அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சொல்ல அதனைக் கேட்டு தலை அசைத்தும் உள்ளனர், சில இலங்கை இந்திய மாடுகள்.

Geen opmerkingen:

Een reactie posten